பிரமாண்டமான சிக்ஸரை அடித்த தீபக் சாஹரை நோக்கி சல்யூட் அடித்த ரோஹித் – வைரலாகும் வீடியோ

Deepak-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் இறுதி டி20 போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் குவித்தது. துவக்க வீரர்களான ரோஹித் 56 ரன்களிலும், இஷான் கிஷன் 29 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேற பின்னர் சூரியகுமார் யாதவ் டக் அவுட், ரிஷப் பண்ட் 4 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற இந்திய அணியானது சறுக்கலை சந்தித்தது.

பின்னர் ஒரு கட்டத்தில் இந்திய அணி 16-வது ஓவரில் போது 140 ரன்கள் இருந்த நிலையில் 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது கடைசி 4 ஓவர்களில் பந்து வீச்சாளரான ஹர்ஷல் பட்டேல் மற்றும் தீபக் சாகர் ஆகியோர் எவ்வாறு விளையாட போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஹர்ஷல் பட்டேல் அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 18 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

மறுபுறம் இறுதிவரை களத்தில் இருந்த தீபக் சாகர் 8 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 21 ரன்கள் குவித்தார். அதிலும் குறிப்பாக கடைசி 20 ஓவரில் ஒரு சிக்சர் இரண்டு பவுண்டரி என 19 ரன்கள் எடுத்து அமர்க்களப்படுத்திய தீபக் சாஹர் தனது அற்புதமான பேட்டிங்கை வெளிக்காட்டினார்.

இந்த போட்டியின் கடைசி ஓவரில் தீபக் சாஹர் 93 மீட்டர் பிரம்மாண்ட சிக்ஸர் ஒன்றினை அடிக்க அதனை டக் அவுட்டில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா சல்யூட் அடித்து கொண்டாடினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : கே.எல் ராகுலை தொடர்ந்து வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்து வெளியேறிய – ஹர்ஷல் படேல்

பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 111 ரன்கள் மட்டுமே எடுத்து 73 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement