கே.எல் ராகுலை தொடர்ந்து வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்து வெளியேறிய – ஹர்ஷல் படேல்

Harshal-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய நியூசிலாந்து அணி 111 ரன்கள் மட்டுமே கஎடுத்து 73 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதன்காரணமாக முழுநேர கேப்டனாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக டி20 தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் எட்டாவது வீரராக களமிறங்கிய ஹர்ஷல் படேல் 11 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 18 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதில் குறிப்பிடவேண்டிய விடயம் யாதெனில் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் டி20 கிரிக்கெட்டில் கேஎல் ராகுல் மட்டுமே ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து நேற்றைய போட்டியில் லாக்கி பெர்குசன் வீசிய பந்தை கிரீசுக்குள் டீப்பாக நின்று விளையாடிய ஹர்ஷல் பட்டேல் தனது பேட்டின் மூலம் ஸ்டம்பை இடித்து ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரது இந்த விக்கெட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 73 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று உள்ளது. பேட்டிங்கை தொடர்ந்து பவுலிங்கிலும் அசத்திய ஹர்ஷல் பட்டேல் 3 ஓவர்கள் வீசி 26 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : INDvsNZ : தொடரின் வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து அணிக்கு ஆறுதல் கூறிய ராகுல் டிராவிட் – விவரம் இதோ

இந்த தொடரில் முதல் முறையாக பேட்டிங் வாய்ப்பை பெற்ற ஹர்ஷல் படேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுமட்டுமின்றி 2 போட்டிகளில் 7 ஓவர்கள் பந்து வீசிய அவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றயது குறிப்பிடத்தக்கது.

Advertisement