INDvsNZ : தொடரின் வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து அணிக்கு ஆறுதல் கூறிய ராகுல் டிராவிட் – விவரம் இதோ

Dravid
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் முதல் தொடராக நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த டி20 தொடர் நடைபெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரானது நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய அசத்தியது.

dravid 1

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடர் வெற்றி குறித்து பேசிய ராகுல் டிராவிட் பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த தொடரில் நாங்கள் வெற்றி பெற்றது சிறப்பான ஒன்று. வீரர்கள் அனைவரும் நன்றாகவே இந்த தொடர் முழுவதும் விளையாடினர். எல்லாம் நன்றாக இருந்தாலும் நாம் நிஜ தன்மையை உணர வேண்டும், சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் : உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடி விட்டு அடுத்த மூன்று நாட்களில் அடுத்த தொடருக்காக தயாராவது மிகவும் கடினம். மேலும் அப்படி தயாராகி அடுத்த 6 நாட்களுக்குள் மூன்று போட்டிகளில் விளையாடுவது நியூசிலாந்து அணிக்கு அவ்வளவு எளிமையான விடயம் கிடையாது. ஆனாலும் அவர்கள் அதை நேர்த்தியாக கையாண்டனர் என்று நியூசிலாந்து அணிக்கு ஆறுதலும் கூறினார்.

dravid 2

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்த தொடரில் இருந்து நாங்கள் சில விடயங்களை கற்றுக் கொண்டுள்ளோம். மேலும் இதனை அப்படியே கொண்டு செல்ல வேண்டியது அவசியம். ஏனெனில் அடுத்த 10 மாதங்களில் அடுத்த உலகக்கோப்பை தொடரானது வர இருக்கிறது. அதற்குள் இந்திய அணியில் உள்ள நிறை குறைகளை கணக்கில் கொள்ள வேண்டும். மேலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பது சிறப்பான ஒன்று. அதன்படி கிடைத்த வாய்ப்புகளை சில வீரர்கள் சிறப்பாக பயன்படுத்தியுள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : முழுநேர கேப்டனாக முதல் தொடரை வென்ற ரோஹித் சர்மா – பேசியது என்ன ? (முழுவிவரம் இதோ)

தற்போது ஓய்வில் இருக்கும் வீரர்கள் அணிக்கு திரும்பும் போது மேலும் இந்திய அணி வலுப்பெறும் சீனியர் வீரர்கள் இல்லை என்றாலும் வீரர்களை மாற்றி மாற்றி விளையாட வைக்க முடிகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு இடத்திற்கும் வெவ்வேறு வீரர்கள் இருப்பது நல்லது தான். அடுத்த உலக கோப்பை தொடரில் ஒரு செட்டில் ஆன அணியை நாங்கள் கொண்டு செல்ல விரும்புகிறோம் என்று டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement