இந்திய அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட பின்னர் மாபெரும் சாதனையை நிகழ்த்திய – ஹர்ஷல் படேல்

Harshal
- Advertisement -

கடந்த மார்ச் மாதம் இறுதியில் துவங்கிய 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நேற்று முன்னர் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியுடன் நிறைவுக்கு வந்தது. இந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அவர்களது வெற்றிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் இறுதிப்போட்டி முடிந்த பின்னர் இந்த தொடரில் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது. அந்த வகையில் இந்த தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக பஞ்சாப் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் தேர்வு செய்யப்பட்டு அவருக்கும் 10 லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்த 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் மட்டும் 24 விக்கெட்டுகளை வீழத்தி ஊதா தொப்பியை பெற்றுள்ளார். மேலும் இதன் மூலம் அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் மூன்றாவது வீரராக மேலும் ஒரு முக்கிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

அந்த வகையில் கடந்த 2021-ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடிய போது 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியிருந்த ஹர்ஷல் பட்டேல் தற்போது 2024-ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பை பெற்றுள்ளார்.

- Advertisement -

இதன் மூலம் இரண்டு வெவ்வேறு அணிகளுக்கு விளையாடி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும் ஹர்ஷல் பட்டேல் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக புவனேஸ்வர் குமார் சன் ரைசர்ஸ் அணிக்காக 2016, 2017 ஆம் ஆண்டுகளிலும், பிராவோ சி.எஸ்.கே அணிக்காக 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களாக இருந்துள்ளனர்.

இதையும் படிங்க : விராட் கோலியுடன் சேர்ந்து விளையாடும் போது நான் கத்துக்கிட்டது இதுதான் – இங்கிலாந்து வீரர் வில் ஜேக்ஸ் பெருமிதம்

கடந்த 2021-ஆம் ஆண்டு சிறப்பாக பந்து வீசியதால் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட ஹர்ஷல் பட்டேல் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இருப்பினும் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் இவருக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்காத வேளையில் தற்போது ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement