இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டூப்ளிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது சென்னை அணியை வீழ்த்தி நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தாலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்து பிளே ஆப் சுற்றுடன் இந்த தொடரில் இருந்து ஏமாற்றத்துடன் வெளியேறியது.
இந்த தொடரின் ஆரம்பத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்.சி.பி அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்திருந்த வேளையில் மோசமான பார்ம் காரணமாக மாக்ஸ்வெல் தற்காலிகமாக பிளேயிங் லெவனில் தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரான வில் ஜேக்ஸ்-க்கு ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவனில் இடம் கிடைத்தது. அவர் அணிக்குள் வந்ததிலிருந்து வெற்றிகளை பெற ஆரம்பித்த பெங்களூரு அணியானது தொடரின் பிற்பகுதியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இந்த தொடரில் தான் விராட் கோலியுடன் இணைந்து விளையாடியது குறித்து பேசியுள்ள வில் ஜேக்ஸ் கூறுகையில் : நானும் விராட் கோலியும் இணைந்து பேட்டிங் செய்யும்போது அவர் எனக்கு பயிற்சி அளிப்பார். அதோடு சேசிங்கில் எப்படி அதிரடியான ரன்களை குவிப்பது என்பதையும் கற்றுக்கொடுத்தார்.
அதோடு சேசிங்கை எப்படி கட்டுக்கோப்பாக கொண்டு செல்வது என்பது குறித்த விலைமதிப்பற்ற விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். அது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. மேலும் சர்வதேச கிரிக்கெட்டிலும் நான் அடுத்த கட்டத்திற்கு செல்ல அவர் கொடுத்த அறிவுரைகள் எனக்கு உதவும்.
இதையும் படிங்க : இதனால் தான் 2024 டி20 உ.கோ சான்ஸ் கிடைக்கல.. 2 வருஷம் தான்னு ரோஹித் சொன்னாரு.. ரிங்கு சிங் பேட்டி
நான் அவருடன் இணைந்து விளையாடிய இன்னிங்ஸ் மறக்க முடியாத ஒன்று. அதோடு அவருடன் அமைத்த பார்ட்னர்ஷிப் குறித்து நான் பெருமையாக கருதுகிறேன். இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் ஜேக்ஸ் ஒரு சதமும் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.