இதனால் தான் 2024 டி20 உ.கோ சான்ஸ் கிடைக்கல.. 2 வருஷம் தான்னு ரோஹித் சொன்னாரு.. ரிங்கு சிங் பேட்டி

RInku Singh 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை விரைவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் நடராஜன் போன்ற தமிழக வீரர்கள் யாருமே தேர்வு செய்யப்படாதது தமிழ்நாடு ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதே போல இளம் வீரர் ரிங்கு சிங் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டது பல ரசிகர்களுக்கு முன்னாள் வீரர்களுக்கும் ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக கடைசி 5 பந்துகளில் 5 சிக்சர்கள் அடித்த அவர் கொல்கத்தா அணிக்காக அற்புதமான வெற்றியை பெற்றுக் கொடுத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அதனால் அடுத்த சில மாதங்களில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.

- Advertisement -

இன்னும் 2 வருஷம்:
அந்த வாய்ப்பில் பெரும்பாலான போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய அவர் இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார். அதனால் தோனிக்கு பின் அடுத்த ஃபினிஷர் கிடைத்து விட்டார் என்று பலரும் அவரை பாராட்டினர். ஆனால் 2024 ஐபிஎல் சீசன்னில் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் அவரை தேர்வுக் குழு முதன்மை உலகக்கோப்பை அணியில் கழற்றி விட்டுள்ளது.

அதற்கு 15 பேரை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பதால் ரிங்கு மீது எந்த தவறுமில்லை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் இந்திய அணியின் கலவை காரணமாக இம்முறை தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். அத்துடன் அடுத்த 2 வருடத்தில் நடைபெறும் 2026 டி20 உலகக் கோப்பையில் கண்டிப்பாக உனக்கு வாய்ப்பு கிடைக்கும் என ரோகித் சர்மா தெரிவித்ததாகவும் ரிங்கு கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் ஒருவர் தேர்வு செய்யப்படவில்லை அது அவருக்கு சோகத்தை கொடுக்கும். இம்முறை அணியின் சேர்க்கை காரணமாக நான் தேர்வு செய்யப்படாமல் போயிருக்கலாம். பரவாயில்லை உங்களுடைய கையில் இல்லாதவற்றைப் பற்றி நீங்கள் கவலைப்படக் கூடாது. ஆரம்பத்தில் அதற்காக கொஞ்சம் நான் சோகமடைந்தேன். இருப்பினும் என்ன நடந்தாலும் அது நன்மைக்காகும்”

இதையும் படிங்க: என்னத்த கொண்டு போகப்போறோம்.. ஒருகாலத்துல இது கூட இல்லாம கஷ்டப்பட்டேன்.. இதுவே பெருசு.. ரிங்கு பேட்டி

“ரோஹித் பையா எதுவும் சொல்லவில்லை. தொடர்ந்து கடினமாக வேலை செய். இன்னும் 2 வருடங்களில் உலகக் கோப்பை வரும் என்பதால் கவலைப்படாதே என்பதைத்தான் அவர் என்னிடம் சொன்னார். அவருடைய கேப்டன்ஷிப் எப்படி இருக்கும் என்பதை மொத்த உலகமும் பார்த்துள்ளது. தனிப்பட்ட முறையில் அவருடன் நான் ஒருமுறை விளையாடியுள்ளேன். அவரிடம் அதிகம் பேசியதில்லை. இருப்பினும் இளம் வீரர்களுக்கு ஆதரவு கொடுக்கும் அவர் எப்போதும் நன்றாக விளையாடுங்கள் என்று சொல்வார்” எனக் கூறினார்.

Advertisement