என்னத்த கொண்டு போகப்போறோம்.. ஒருகாலத்துல இது கூட இல்லாம கஷ்டப்பட்டேன்.. இதுவே பெருசு.. ரிங்கு பேட்டி

Rinku SIngh KKR
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன் அணி பட்டத்தை வென்றது. முன்னதாக கடந்த வருடம் கொல்கத்தாவுக்கு 474 ரன்கள் விளாசிய ரிங்கு சிங் அனைவரையும் திரும்பிப் பார்க்கும் வகையில் அசத்தலாக செயல்பட்டார். குறிப்பாக குஜராத்துக்கு எதிராக கடைசி ஓவரில் யாஷ் தயாளுக்கு எதிராக கடைசி 5 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்ட போது 5 சிக்சர்கள் அடித்த அவர் கொல்கத்தாவுக்கு வரலாறு காணாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

அதன் காரணமாக இந்திய அணிக்காகவும் அறிமுகமான அவர் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றினார். அதனால் தோனிக்கு பின் சிறந்த ஃபினிஷர் கிடைத்து விட்டார் என்று பலரும் அவரை பாராட்டினர். ஆனால் இப்படிப்பட்ட அவருக்கு ஐபிஎல் தொடரில் வெறும் 55 லட்சம் சம்பளமாக கொடுக்கப்படுகிறது என்பது பல ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

- Advertisement -

இதுவே பெருசு:
ஏனெனில் அவருக்கு எதிராக 5 சிக்ஸர்களை வழங்கிய யாஷ் தயாள் இம்முறை அசால்ட்டாக பெங்களூரு அணிக்காக 5 கோடிக்கு வாங்கப்பட்டார். அதே போல சுமாராக விளையாடும் பல வீரர்கள் இதே ஐபிஎல் தொடரில் கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பளமாக அள்ளிச் செல்கின்றனர். இருப்பினும் 2018 சீசனில் கொல்கத்தா அணிக்காக 80 லட்சத்திற்கு வாங்கப்பட்ட அவருடைய சம்பளம் 2022 சீசனில் 55 லட்சமாக குறைக்கப்பட்டது.

அந்த சம்பளத்திலும் கடந்த வருடம் 50 லட்சத்தை தம்முடைய சொந்த ஊரில் தாம் வளர்வதற்கு உதவிய விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக ரிங்கு நன்கொடையாக கொடுத்தார். இந்நிலையில் ஒரு காலத்தில் பணமே இல்லாமல் திண்டாட்டிய தமக்கு இதுவே பெரிய சம்பளம் என்று ரிங்கு தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “50 – 55 லட்சங்கள் என்பதே பெரியது. இவ்வளவு பணம் சம்பாதிப்பேன் என்று நான் எப்போதும் நினைத்ததில்லை”

- Advertisement -

“குழந்தையாக இருக்கும் போது 10 – 5 ரூபாய் கிடைக்காதா என்று நினைத்தேன். எனவே இப்போது எனக்கு கிடைக்கும் 55 லட்சம் ரூபாய் பெரியது. கடவுள் என்ன கொடுக்கிறாரோ அதை வைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதனால் எனக்கு இவ்வளவு பணம் கிடைத்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. 55 லட்சம் கிடைத்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது கூட இல்லாத போது பணத்தின் மதிப்பை நான் உணர்ந்தேன்”

இதையும் படிங்க: ரோஹித் பாய் எனக்கு அடுத்த 2 வருஷம் டைம் குடுத்திருக்காரு.. அதுபோதும் எனக்கு – ரிங்கு சிங் வெளிப்படை

“உண்மையில் சொல்ல வேண்டுமெனில் இதெல்லாம் ஒரு மாயை. நீங்கள் எதையும் கொண்டு வரவில்லை. எதையும் கொண்டு செல்ல மாட்டீர்கள். காலம் எப்போது மாறும் என்பது தெரியாது. வந்த வழியே திரும்பிச் செல்ல வேண்டும் என்பதால் தரையிலேயே இருக்க வேண்டும். வேறு என்ன வேண்டும்” என்று நெஞ்சை தொடும் வகையில் கூறினார்.

Advertisement