IND vs WI : இந்திய அணியின் தேர்வு கொஞ்சம் கூட சரியில்ல. டீம்ல பினிஷரான அவரை சேத்திருக்கனும் – ஹர்ஷா போக்ளே கருத்து

Harsha-Bhogle
- Advertisement -

இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ கடந்த புதன்கிழமை அன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஹார்டிக் பாண்டியா தலைமையிலான பதினைந்து பேர் கொண்ட இந்த இந்திய அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் திலக் வர்மா ஆகியோருக்கு முதல் முறையாக இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த அணித்தேர்வு குறித்து ரசிகர்கள் மத்தியிலும் சமூக வலைதளத்திலும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

Tilak-Varma

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் ஃபினிஷராக திலக் வரமாவை தேர்வு செய்துள்ளது தவறு என்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் என்பதனால் திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டாரா? என்று கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-ஆவது ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடியா திலக் வர்மா 42 ரன்கள் சராசரியுடன் 343 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்.

அதேவேளையில் கடந்த சீசனில் ரிங்கு சிங் 14 போட்டிகளில் விளையாடி 59 ரன்கள் சராசரியுடன் கிட்டத்தட்ட 150 ஸ்ட்ரைக் கேட்டுடன் 474 ரன்கள் குவிக்கும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அனைவரது மத்தியிலும் விவாதத்தை எழுப்பியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல கிரிக்கெட் விமர்சகரான ஹர்ஷா போக்ளே தனது டிவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

Rinku Singh 1

இதுகுறித்து கருத்து தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு கொடுக்காதது ஒரு கடினமாக முடிவாகவே எனக்கு தெரிகிறது. ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் ஓப்பனிங் செய்வார்கள் என்பதனால் இஷான் கிஷன் கீப்பராக தேர்வு செய்யப்பட்டிருக்கலாம். அதனால் தான் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன்.

- Advertisement -

மேலும் ரிங்கு சிங்கை தாண்டி திலக் வர்மாவுக்கு நேரடியாக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வீரர் பினிஷராக கதவின் அருகிலேயே காத்திருக்கும் வேளையில் அவரது இடத்திற்கு மற்றொரு வீரரை தேர்வு செய்து இருக்கிறார்கள். இது எந்த அளவுக்கு சரி என்று தெரியவில்லை. அதேபோன்று எனது பெரிய கவலையே பந்துவீச்சு துறையில் தான் உள்ளது. ஏனெனில் அக்சர் பட்டேலை தவிர எந்தவொரு பவுலருக்கும் பேட்டிங் செய்ய தெரியாது.

இதையும் படிங்க : IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் நிராகரிக்கப்பட்ட ருதுராஜ் மற்றும் ரிங்கு சிங்கிற்கு – கிடைக்கவுள்ள வாய்ப்பு

அதேபோன்று ஹார்டிக் பாண்டியா தவிர எந்தவொரு பேட்டருக்கும் பந்துவீச தெரியாது. இப்படி இந்திய அணியின் பேலன்ஸ் சரியில்லாமல் இருக்கிறது. அக்சர் பட்டேல் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்பதனால் மேலும் ஒரு சுழற்பந்து வீச்சாளரை மட்டும்தான் அணியில் சேர்க்க முடியும். அதேபோன்று வேகப்பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார் ஆகிய இருவரையும் நம்பி மட்டுமே ஹர்டிக் பாண்டியா கடைசி கட்ட ஓவர்களில் பந்தை வழங்குவார் என்று கருதுவதாக ஹர்ஷா போக்ளே தனது கருத்தினை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement