IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் நிராகரிக்கப்பட்ட ருதுராஜ் மற்றும் ரிங்கு சிங்கிற்கு – கிடைக்கவுள்ள வாய்ப்பு

Rinku-and-Ruturaj
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் என மூன்று வகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் ஏற்கனவே பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ROhit Sharma IND vs WI

- Advertisement -

அதனைத்தொடர்ந்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது அங்கு நடைபெற்று வரும் பயிற்சி போட்டியில் விளையாடி வருகின்றனர். இந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கு பிறகு அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியையும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிசிசிஐ அறிவித்தது.

இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு ஹார்டிக் பாண்டியாவின் தலைமையில் 15 பேர் கொண்ட இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே இந்த தொடரில் விளையாடும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இந்த இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் கலக்கிய பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட வேளையில் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

Ruturaj and Rinku

அதேபோன்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம் பிடித்துள்ள சிஎஸ்கே அணியின் துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படி மிகச்சிறந்த வீரர்களான இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கிடைக்காதது அனைவரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ருதுராஜ் கெய்க்வாட் சாம்பியன் பட்டம் பெற்ற சிஎஸ்கே அணியில் மிகச்சிறந்த துவக்க ஆட்டக்காரராக திகழ்ந்து வருகிறார்.

- Advertisement -

அதேபோன்று கொல்கத்தா அணிக்காக பின்வரிசையில் பினிஷராக களமிறங்கி நம்ப முடியாத வெற்றிகளை பெற்றுத்தந்த ரிங்கு சிங் அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றார். இப்படி அவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கிடைக்காதது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ தரப்பிலிருந்து வெளியாகியுள்ள ஒரு அறிக்கையின்படி : இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர்கள் இருவரும் இடம் பெறவில்லை என்றாலும் வெஸ்ட் இண்டீஸ் தொடரை முடித்துக் கொண்டு அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு நடைபெற உள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது.

இதையும் படிங்க : இந்தியாவ ஜெயிச்சுட்டா மட்டும் என்ன கொடுப்பீங்க? எங்க கேரக்டர நீங்க இன்னும் புரிஞ்சுக்கல – பாபர் அசாம் அசால்ட் பேட்டி

அந்த தொடரானது வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள வேளையில் அந்த தொடருக்கான இந்திய அணியில் அவர்கள் இருவரும் நிச்சயம் இடம் பெறுவார்கள் என்று அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement