இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க பலமான அஸ்திவாரத்தை போட்டுள்ளார். இளம்வீரரை பாராட்டிய – ஹர்ஷா போக்ளே

Bhogle
- Advertisement -

இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி விட வேண்டும் என்பதே இந்தியாவில் உள்ள பல இளம் கிரிக்கெட் வீரர்களின் கனவாக உள்ளது. அப்படி இந்திய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற வேண்டுமெனில் உள்ளூர் தொடர்களில் தங்களது பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தி திறனை நிரூபித்தால் மட்டுமே தேசிய அணிக்கு அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் ஆண்டுதோறும் இளம் வீரர்களுக்காக பல உள்ளூர் தொடர்கள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் ரஞ்சி டிராபி, துலீப் டிராபி, இராணி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்கள் இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த தொடர்களில் சிறப்பாக விளையாடினால் நிச்சயம் இந்திய அணியில் அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் மும்பையை சேர்ந்த இளம் வலதுகை ஆட்டக்காரரான சர்ஃப்ராஸ் கான் அண்மையில் ரஞ்சிக்கோப்பையில் சரமாரியாக ரன்களை குவித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து துலீப் கோப்பையிலும் சதம் அடித்த அவர் இந்திய ஏ அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். அப்படி நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக இடம் பிடித்த அவர் அந்த தொடரிலும் சதம் அடித்து அசத்தியிருந்தார். இப்படி அடுத்தடுத்து இவர் தொடர்ச்சியாக சதங்களை விளாசவே இவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று பல்வேறு குரல்கள் எழுந்தன. மேலும் மும்பையைச் சேர்ந்த இளம் வீரரான இவரை பாராட்டி சூரியகுமார் யாதவ் கூட சமீபத்தில் “உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்”, நிச்சயம் பெரிய உயரத்தை அடைவாய் என்றெல்லாம் பாராட்டி இருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் இராணி கோப்பை தொடரின் போட்டியில் கூட அவர் சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் விளையாடி வருகிறார். இப்படி உள்ளூர் கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் சதம் அடித்து அசத்தி வரும் இவருக்கு தற்போது இந்தியவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளேவும் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்து அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்றும் தனது வேண்டுகோளை முன் வைத்துள்ளார்.

- Advertisement -

அதன்படி அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் : இந்திய அணிக்கு அடுத்த டெஸ்ட் சீரியஸ் இன்னும் நீண்ட நாட்கள் இருக்கிறது. ஆனால் அதற்குள் தனது அஸ்திவாரத்தை பலமாக போட்டுள்ளார். நிச்சயம் அவரை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 24 வயதே ஆன இளம்வீரர் சர்ஃப்ராஸ் கான் தனது 17வது வயது முதல் அதாவது 2015 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அந்த இந்திய வீரர் நிச்சயம் டி20 உலககோப்பையில் சதம் அடிப்பார் – கிரீம் ஸ்வான் நம்பிக்கை

அதோடு இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பாவும் தனது பங்கிற்கு சர்ஃப்ராஸ் கானிற்கு சீக்கிரம் டெஸ்ட் போட்டிக்கான உபகரணங்களை கொடுங்கள் என்று இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கும்படி மறைமுகமாக தனது ஆதரவினை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement