அந்த இந்திய வீரர் நிச்சயம் டி20 உலககோப்பையில் சதம் அடிப்பார் – கிரீம் ஸ்வான் நம்பிக்கை

Swann
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் இம்மாதம் அக்டோபர் 16-ஆம் தேதி துவங்கும் டி20 உலக கோப்பை தொடரானது நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்ட வேளையில் இந்திய அணியும் தற்போது முழு பலத்துடன் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க காத்திருக்கிறது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலககோப்பையில் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பாக்கப்பட்ட இந்திய அணியானது லீக் சுற்றுகளிலே வெளியேறியது.

IND

- Advertisement -

எனவே இம்முறை எப்படியாவது கோப்பையை கைப்பற்றியே ஆக வேண்டும் என்கிற கனவுடன் ரோகித் சர்மா தலைமையில் தற்போது முழுவீச்சில் இந்திய அணி தயாராகி வருகிறது. ரோகித் சர்மா ஏற்கனவே ஐபிஎல் தொடர்களில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்று வந்துள்ளதால் இம்முறை நிச்சயம் உலக கோப்பையை பெற்று தருவார் என்று அவர் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்த உலகக்கோப்பை தொடர் குறித்த பல்வேறு கருத்துக்களை வெளிப்படையாக சமூகவலைத்தளம் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

Rohit Sharma IND vs AUS

அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான கிரீம் ஸ்வான் இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா நிச்சயம் சதம் அடிப்பார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மா எதிர்வரும் இந்த டி20 உலக கோப்பையில் கட்டாயம் சதம் அடிப்பார். அதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.

- Advertisement -

ஏனெனில் ரோகித் சர்மா போன்ற தரமான வீரர் மிகப் பெரிய தொடர்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு அபாயகரமான வீரராக மாறுவார். ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. அவர் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடிவிட்டால் கூட மீண்டும் தனது ரிதத்தை பிடித்து விடுவார்.

இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கிடையே விரிசல் என்று வந்த வதந்திகள் இறுதியில் நிஜமான 5 தருணங்கள்

அதோடு கடந்த சில தொடர்களாகவே அவர் இந்திய அணியை வழிநடத்து வரும் விதம் அபாரமாக உள்ளது. அவர் தற்போது சிறப்பான ஃபார்மில் இல்லை என்றாலும் நிச்சயம் டி20 உலக கோப்பையின் போது அபாயகரமான வீரராக மாறுவார் என கிரீம் ஸ்வான் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement