இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கிடையே விரிசல் என்று வந்த வதந்திகள் இறுதியில் நிஜமான 5 தருணங்கள்

Dravid
- Advertisement -

கிரிக்கெட் என்பது 11 பேர் கொண்ட அணி விளையாட்டு என்பதால் அதில் வெற்றி பெறுவதற்கு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் ஒன்றாக இணைந்து விளையாடும் வீரர்களுக்கு மத்தியில் ஏதோ ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் ஏற்பட்டு அவர்களிடையே சண்டை என்ற வதந்திகள் செய்திகளாக காற்றில் உலா வருவதும் வழக்கமாகும். ஆனால் நெருப்பில்லாமல் புகையாது என்ற அற்புதமான பழமொழிக்கேற்ப ஒரு கட்டத்தில் அந்த வதந்திகள் உண்மை என்று நிரூபிக்கும் வகையில் ஆதாரங்களும் வெளிவரும்.

அந்த வகையில் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை இந்திய கிரிக்கெட்டில் வதந்திகளாக வந்து இறுதியில் உண்மையான சில விரிசல்களை பற்றி பார்ப்போம்:
5. அமர்நாத் – விஜி: 1932இல் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இந்தியா 1936இல் இங்கிலாந்துக்கு விஜயநகர மகாராஜா தலைமையில் பயணித்தது.

- Advertisement -

கிரிக்கெட் பற்றிய அடிப்படை தெரியாத போதிலும் அதில் ஆர்வம் இருந்ததாலும் மகாராஜாவாக இருந்ததாலும் இந்தியாவின் 2வது கேப்டனாக பொறுப்பேற்ற அவருக்கு கிரிக்கெட் கலையை கற்றிருந்த லாலா அமர்நாத் போன்ற சீனியர் வீரர்கள் மரியாதை கொடுக்கவில்லை.

அந்த நிலையில் நடைபெற்ற முதல் போட்டியில் பேட்டிங் செய்ய தயாராக இருக்குமாறு அமர்நாத்திட்டம் விஜி மஹாராஜா சொன்ன போதிலும் மரியாதை கொடுக்க தவறியதை மனதில் வைத்துக்கொண்டு வழக்கமான இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்பவில்லை. அதனால் ஏற்பட்ட மனக்கசப்பில் முதல் போட்டிக்குப் பின் அமர்நாத் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட நிலையில் கடைசி வரை அவர்களுக்கிடையே விரிசல் இருந்தது.

- Advertisement -

4. சேவாக் – தோனி: இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டனான எம்எஸ் தோனி 2011 உலக கோப்பைக்கு பின் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்குவதற்காக சேவாக், சச்சின், கம்பீர் ஆகியோரை மெதுவாக பீல்டிங் செய்ய கூடியவர்கள் என்பதைக் காரணமாகக் காட்டி 2012 முத்தரப்பு தொடரில் சுழற்சி முறையில் பயன்படுத்தினார்.

ஆனால் அடுத்த போட்டியில் விளையாட தேர்வான சேவாக் ஒரு சிறப்பான கேட்ச்சை பிடித்த பின் “நீங்கள் என்னுடைய கேட்ச்சை பார்த்தீர்களா? கடந்த 10 வருடங்களில் அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை” என்று தோனியை விமர்சித்திருந்தார். அப்போது அவர்களிடையே விரிசல் என்று ஊடகங்களிடையே செய்தி வந்ததை அவர்கள் மறுத்தாலும் அந்தக் கருத்துக்கு பின் சேவாக் கொஞ்சம் கொஞ்சமாக அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார் என்பது வதந்திகளை உண்மையாக்கியது.

- Advertisement -

3. டிராவிட் – சச்சின்: முல்தான் நகரில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் காயமடைந்த கங்குலிக்கு பதில் கேப்டனாக செயல்பட்ட டிராவிட் சச்சின் 194* ரன்களில் விளையாடிய போது இரட்டை சதத்தை அடிக்க விடாமல் டிரா செய்வதாக அறிவித்தது இந்திய கிரிக்கெட்டில் இன்றுவரை சர்ச்சையாக இருந்து வருகிறது. அப்போட்டியில் டிரா செய்யப் போகிறேன் என பெவிலியனில் இருந்து டிராவிட் முன்னதாகவே சைகை செய்து எச்சரிக்கை கொடுத்ததாக தெரிந்தது.

ஆனால் இடைவெளியில் தன்னிடம் சொன்னதை விட 2 ஓவர்கள் முன்கூட்டியே ட்ரா செய்யும் முடிவை டிராவிட் அறிவித்ததாக சச்சின் அதிருப்தி தெரிவித்தார். அத்துடன் அணியின் நலனுக்காக அந்த முடிவை எடுத்ததாக ராகுல் தம்மிடம் தெரிவித்ததாக தன்னுடைய சுய சரிதை புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த சச்சின் தாமும் இந்தியாவின் நலனுக்காக தானே 194 ரன்கள் சேர்த்தேன்? என்று வெளிப்படையாக விமர்சித்திருந்தார். இருப்பினும் இப்போது வரை அதற்கு ட்ராவிட் தெளிவான பதில் அளித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

2. கவாஸ்கர் – கபில்: 1971இல் அறிமுகமானது முதல் சூப்பர் ஸ்டாராக இருந்த கவாஸ்கரை 1983 உலக கோப்பையை வென்ற கபில் தேவ் முந்தினார். இருப்பினும் அதே வருடம் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் மோசமான தோல்வியை சந்தித்ததால் கவாஸ்கர் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் அவர்களுக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டது.

அதன்பின் மீண்டும் கேப்டனாக செயல்பட்ட கபில்தேவ் சென்னையில் நடந்த ஒரு போட்டியில் கவாஸ்கர் 236 ரன்கள் எடுத்திருந்தபோது இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்ததற்கு அதிருப்தி தெரிவித்தார். அதற்கேற்றார் போல் 1984இல் டெல்லியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சுமாரான ஷாட்டை அடித்து தோல்விக்கு காரணமாக அமைந்ததால் கபில்தேவ் பெஞ்சில் அமர வைக்கப்பட்டதற்கு கவாஸ்கரே காரணமென்று என்ற செய்திகள் வந்தன.

ஆனால் அந்த முடிவு எடுக்கும்போது அணி மீட்டிங்கில் தாம் இல்லை என்று கவாஸ்கர் ஒரு புத்தகத்தில் தெரிவித்திருந்தார். இருப்பினும் அதை கபில் ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியில் அவர்களை சமாதானப்படுத்த பிசிசிஐ தலைவர் என்கேபி சால்வே ஒரு மீட்டிங் போட்ட போதிலும் அவர்களுகிடையே மோதல் என்று அடிக்கடி ஊடகங்களில் செய்திகள் வந்தன.

1. சச்சின் – அசாருதீன்: அசாருதீன் உச்சத்தில் இருந்த 1989இல் 16 வயது குழந்தையாக அறிமுகமான சச்சின் நாளடைவில் அவரையும் முந்தி 1996 உலகக்கோப்பையில் அவரது தலைமையில் சந்தித்த தோல்விக்கு பின் இந்தியாவின் கேப்டனாக பொறுப்பேற்றார். ஆனால் அதில் தடுமாறியதால் 1998இல் மீண்டும் அசாருதீன் கேப்டனாக பொறுப்பேற்றார். அப்போது முதல் மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில் அசார் அணிக்கு தீங்கு விளைவிக்கிறார் என்றும் தமக்கு பேட்டிங்கில் தேவையான ஆதரவுகளை கொடுக்கவில்லை என்றும் சச்சின் கருதினார்.

பின்னர் 1999 உலகக் கோப்பையில் தோற்றதால் மீண்டும் சச்சின் கேப்டனாக நியமிக்கப்பட்டபோது ஆஸ்திரேலிய தொடரில் அசாரை அணியில் சேர்க்க மறுப்பு தெரிவித்தார். பின்னர் 2000ஆம் ஆண்டு மீண்டும் இந்திய அணியில் அசாருதீன் இணைந்தபோது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக சச்சின் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

அதைவிட அந்த சமயத்தில் புயலை கிளப்பிய சூதாட்ட புகாரில் சிபிஐ விசாரித்தபோது அசாருதீன் புக்கிளுடன் பணிபுரிவதாக தாம் நினைத்ததாகவும் எப்போதும் அவர் தன்னுடைய அனைத்தையும் அணிக்கு கொடுக்கவில்லை என்று சச்சின் கூறினார். அதனால் பிசிசிஐயால் அதிரடியாக தடை செய்யப்பட்ட அசாருதீன் அதன்பின் இந்தியாவுக்கு விளையாடவில்லை.

Advertisement