அப்படி என்ன பண்ணிட்டாருனு இவருக்கு மீண்டும் மீண்டும் சேன்ஸ் தராங்கனு தெரியல – இங்கி வீரர் விமர்சனம்

Ishanth-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் அனுபவ வீரரான இஷாந்த் சர்மா மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதன் காரணமாக இரண்டாவது போட்டியில் காயத்தை காரணம் காட்டி அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இனி அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது அரிதுதான்.

ind

- Advertisement -

இந்திய அணியின் அனுபவ வீரரான இஷாந்த் ஷர்மா 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் பங்கேற்ற அனுபவம் உடையவர். இருப்பினும் கடந்த சில தொடர்களாகவே விக்கெட் வீழ்த்த சிரமப்பட்டு வரும் அவரது இடம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் இஷாந்த் சர்மாவை இந்த நியூசிலாந்து தொடருக்கு தேர்வு செய்தது ஏன் ? என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னைப் பொறுத்தவரை இந்திய டெஸ்ட் அணியில் தற்போது இஷாந்த் சர்மாவை விட சிறப்பான பந்து வீச்சாளராக சிராஜ் திகழ்ந்து வருகிறார். மேலும் இந்திய ஆடுகளங்களில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் என்பது சரியான காம்பினேஷனாக இருக்கும்.

ishanth 1

இஷாந்த் சர்மா இங்கிலாந்து தொடரில் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறிய வேளையில் அவருக்கு எப்படி இந்த நியூஸிலாந்து தொடரில் வாய்ப்பு கொடுத்தார்கள் என்பது எனக்கு புரியவில்லை. என்னை பொருத்தவரை நிச்சயம் இஷாந்த் சர்மாவிற்கு பதில் சிராஜ் ஆடுவது சிறப்பான ஒன்றாக இருக்கும் என்று கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : மும்பை டெஸ்ட் : கேப்டனாக மட்டுமின்றி அணியின் வீரராகவும் விராட் கோலி – படைத்துள்ள புதிய சாதனை

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : அதேபோன்று பேட்டிங் யூனிட்டில் புஜாரா மற்றும் ரகானே ஆகியோரது இடமும் இளம் வீரர்களுக்கு செல்ல வேண்டிய ஒன்று. சூரியகுமார் யாதவ் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறார் அவருக்கு வாய்ப்பளித்து பார்க்கலாம் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement