மும்பை டெஸ்ட் : கேப்டனாக மட்டுமின்றி அணியின் வீரராகவும் விராட் கோலி – படைத்துள்ள புதிய சாதனை

Kohli-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி 1 0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தத் தொடரை கைப்பற்றியது மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக இந்திய மண்ணில் 14-வது டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

IND

- Advertisement -

மேலும் இந்த வார இறுதியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட உள்ளது. இந்நிலையில் அண்மையில் வெளியான ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய டெஸ்ட் அணி மீண்டும் 124 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மிகப்பெரிய சாதனைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். அதுமட்டுமின்றி முதல் நபராக சர்வதேச கிரிக்கெட்டில் இந்த சாதனையை அவர் தான் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

kohli 1

அந்த சாதனை யாதெனில் இதுவரை இந்திய அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட்டிலும் விளையாடிய உள்ள கோலி ஒவ்வொரு வடிவத்திலும் 50 வெற்றிகளைப் பெற்ற அணியில் இருந்துள்ளார் என்பதே அந்த சாதனை. ஒவ்வொரு வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் 50 வெற்றிகளைப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement