- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆண்கள் அணியை தொடர்ந்து பெண்கள் அணியும் காட்டிய கெத்து.. பாக் அணிக்கெதிரான போட்டியில் – நடந்த நிகழ்வு

இங்கிலாந்து நாட்டில் தற்போது மகளிருக்கான ஐசிசி 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இன்று எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை எதிர்த்து விளையாடியது. அந்த வகையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

பாகிஸ்தான் அணிக்கெதிராக கெத்து காட்டிய மகளிர் அணி :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை குவித்தது. இந்திய மகளிர் அணி சார்பாக அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 68 ரன்களையும், ஹர்மன்ப்ரீத் கவுர் 36 ரன்களையும் குவித்தனர். பின்னர் 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் மகளிர் அணியானது :

- Advertisement -

இந்திய மகளிர் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய மகளிர் அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தீப்தி சர்மா 4 ஓவர்களில் வெறும் 10 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது டாஸ் போடுகையில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பாகிஸ்தான் கேப்டனான பாத்திமா சனாவுடன் கைகுலுக்கவில்லை. ஏற்கனவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே சுமூக உறவு இல்லாததாலும், பகல்ஹாம் தாக்குதல் நடைபெற்றதாலும் இந்திய ஆடவர் அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்கவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : எல்லார் மாதிரியும் எனக்கும் அந்த பிரஷர் இருந்தது.. அறிமுக போட்டி குறித்து பேசிய குர்னூர் பிரார் – விவரம் இதோ

அதனை தொடர்ந்து தற்போது இந்திய மகளிர் அணியும் பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் கை குலுக்காமல் சென்றது பலரது மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -