எல்லார் மாதிரியும் எனக்கும் அந்த பிரஷர் இருந்தது.. அறிமுக போட்டி குறித்து பேசிய குர்னூர் பிரார் – விவரம் இதோ

Gurnoor Brar
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஜூன் 13-ஆம் தேதியான நேற்று தரம்சாலா நகரில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் பஞ்சாப்பை சேர்ந்த 26 வயதான வேகப்பந்து வீச்சாளரான குர்னூர் பிராருக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவருக்கு தற்போது முதல் முறையாக இந்திய சீனியர் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட அவர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

தனது அறிமுக ஒருநாள் போட்டி குறித்து பேசிய : குர்னூர் பிரார்

குறிப்பாக இந்த போட்டியில் 4.5 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரது இந்த சிறப்பான செயல்பாடு பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. இவ்வேளையில் நேற்றைய போட்டியில் அறிமுகமாகி மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியது குறித்து போட்டி முடிந்த பின்னர் சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் கூறியதாவது : உண்மையிலேயே இந்த போட்டியின் போது எனக்கும் எல்லோரையும் போன்று ஒரு அழுத்தம் இருந்தது. அதேபோன்று இந்திய அணிக்காக விளையாடப்போகிறோம் என்கிற ஆச்சரியமும் இருந்தது. நான் இந்திய அணிக்காக மிகச்சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்துடனே பந்துவீச துவங்கினேன். அதோடு நாட்டிற்காக விளையாடும் போது நம்முடைய பெஸ்ட்டை வழங்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டே தான் பந்து வீசினேன்.

கடவுளின் ஆசிர்வாதத்தினால் என்னுடைய முதல் போட்டி மிகச் சிறப்பாக இருந்தது. அதிலும் குறிப்பாக நான் முதல் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் இவ்வளவு நாட்கள் போட்ட கடின உழைப்பிற்கு பரிசு கிடைத்ததாக உணர்ந்தேன். அதன் பிறகு என்னால் இன்னும் எளிதாக பந்துவீச முடிந்தது. உண்மையிலேயே சர்வதேச போட்டிகளில் முதல் விக்கெட் என்பது எல்லோருக்குமே ஒரு மைல்கல் தான்.

- Advertisement -

இதையும் படிங்க : வீரேந்திர சேவாக்கிற்கு அடுத்து இரண்டாவது இந்திய வீரராக ரோஹித் சர்மா நிகழ்த்திய – தனித்துவமான சாதனை

அந்த வகையில் என்னுடைய முதல் விக்கெட்டும் எனக்கு மிக ஸ்பெஷலாக அமைந்தது என குர்னூர் பிரார் கூறினார். நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 194 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய இந்திய அணி 22.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 195 ரன்கள் குவித்து 7 விக்கெட் காகத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement