வீரேந்திர சேவாக்கிற்கு அடுத்து இரண்டாவது இந்திய வீரராக ரோஹித் சர்மா நிகழ்த்திய – தனித்துவமான சாதனை

Rohit and Sehwag
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது ஜூன் 13-ஆம் தேதியான நேற்று தரம்சாலா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நேற்றைய போட்டியில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித் சர்மா அதிக வயதில் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

வீரேந்திர சேவாக்கிற்கு அடுத்து ரோஹித் சர்மா நிகழ்த்திய சாதனை :

அதுமட்டும் இன்றி தற்போது ஒரு வடிவ போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் ரோகித் சர்மா அடுத்த 2027 உலக கோப்பை தொடரில் விளையாட வேண்டுமெனில் இந்த தொடர் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவ்வேளையில் நேற்றைய முதல் போட்டியில் 16 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 16 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி ஏமாற்றம் அளித்திருந்தார். ஆனாலும் அவரது பேட்டிங் மிகச் சிறப்பாக இருந்தது.

- Advertisement -

நேற்று அவர் அடித்த முதல் பவுண்டரியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரராக எட்டாவது இடத்தில் இருந்த ஜாக் காலிஸை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா எட்டாவது இடத்தை பிடித்திருந்தார். ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை ரோகித் சர்மா தற்போது 11,593 ரன்களை குவித்துள்ளார்.

நேற்றைய போட்டியில் சில முக்கிய சாதனைகளை நிகழ்த்தியதோடு மட்டுமின்றி இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக்கிற்கு அடுத்து இரண்டாவது வீரராகவும் ரோஹித் சர்மா ஒரு மாபெரும் சாதனை நிகழ்த்தியிருந்தார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் ரோகித் சர்மா நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்திய அணியை பொறுத்தவரை துவக்க வீரராக அதிக ரன்கள் அடித்த வீரராக சேவாக் 16,119 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : குர்னூர் பிராரிடம் இருக்கும் ப்ளஸ் இதுதான்.. அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கு – வாசிம் ஜாபர் வாழ்த்து

அவரை தொடர்ந்து நேற்று ரோகித் சர்மா அடித்த 16 ரன்களுடன் சேர்த்து துவக்க வீரராக இந்திய அணிக்காக 16,000 ரன்களை பூர்த்தி செய்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா நிகழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக துவக்க வீரராக அதிக ரன்கள் அடித்த வீரராக கிரிஸ் கெயில் 18,867 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement