ஸ்கூல் பசங்க மாதிரி விளையாடுறீங்க, இந்தியாவை கலாய்த்த நாசர் ஹுசைன் – ஹர்மன்ப்ரீத் கொடுத்த பதிலடி என்ன

Nasser Hussain
Advertisement

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 2023 ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பையில் இந்தியா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஏனெனில் இதே தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற மகளிர் அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்தியா அந்த புத்துணர்ச்சியுடன் இத்ததொடரிலும் கோப்பை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பினர். ஆனால் வழக்கம் போல லீக் சுற்றில் அசத்தலாக செயல்பட்டு நாக் அவுட் சுற்றுக்கு சென்ற இந்தியா வலுவான நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொஞ்சமும் முன்னேறாத அதே பழைய சொதப்பலை வெளிப்படுத்தி 5 ரன்கள் வித்தகத்தில் போராடி தோல்வியடைந்து வெளியேறியது.

Virender Sehwag Womens

நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சுமாரான ஃபீல்டிங் மற்றும் கடைசி நேரத்தில் பந்து வீச்சில் சொதப்பிய இந்தியாவை சிறப்பாக எதிர்கொண்டு 20 அவர்களின் 172/4 ரன்கள் சேர்த்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஸ்மிரிதி மந்தனா, சபாலி வர்மா வர்மா, யாஸ்திகா பாட்டியா ஆகிய டாப் ஆர்டர் வீராங்கனைகள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். அதனால 21/3 என சரிந்த இந்தியாவை 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய ஜெமிமா ரோட்ரிகஸ் 43 (24) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

ஸ்கூல் பசங்க:
இருப்பினும் அவருடன் 52 (34) ரன்கள் குவித்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் அதிரடியாக செயல்பட்டதால் 33 பந்துகளில் 41 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அப்போது 2 ரன்கள் எடுக்க முயற்சித்த அவர் பந்து மெதுவாக வருவதாக நினைத்துக் கொண்டு சற்று அஜாக்கிரதையாக ஓடினார். போதாக்குறைக்கு வெள்ளை கோட்டை நோக்கி சறுக்குவது போல எடுத்துச் சென்ற அவரது பேட்டை பிட்ச்சில் இருந்த புற்கள் தடுத்தது. அதனால் வெள்ளை கோட்டுக்கு உள்ளே சென்றும் அவரது உடல் பாகங்கள் மற்றும் பேட் கோட்டை தொடாததால் ரன் அவுட்டான அவக்ருகுப்பின் வந்த வீராங்கனைகள் வழக்கம் போல இந்தியாவின் வெற்றி தாரை வார்தனர்.

hussain

இந்நிலையில் அந்த சமயத்தில் ஜாக்கிரதையுடன் ஓட வேண்டிய ஹர்மன்ப்ரீத் கௌர் ஸ்கூல் குழந்தைப் போல் செயல்பட்டதாகவும் இந்திய அணியினரும் அதே போல செயல்பட்டு கையில் வைத்திருந்த வெற்றியை கோட்டை விட்டதாகவும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் நேரலை வர்ணனையில் கலாய்க்கும் வகையில் விமர்சித்தார். இருப்பினும் வரலாற்றில் பலமுறை இது போல் புற்கள் தடுத்து நிறைய பேர் ரன் அவுட்டாகியுள்ளதாக தெரிவிக்கும் ஹர்மன்ப்ரீத் இந்திய அணி குழந்தைகளைப் போல் அல்லாமல் முதிர்ச்சியுடன் விளையாடியதாக அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் (நாசர்) போட்டி முடிந்த பின் அப்படி சொன்னாரா? பரவாயில்லை. அதைப் பற்றி எனக்கு தெரியாது ஆனால் அது நீங்கள் சூழ்நிலையை எப்படி பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்தவராகும். சில நேரங்களில் இவ்வாறு நடக்கும். வரலாற்றில் அது போல சிங்கிள் எடுக்க முயற்சித்த போது முக்கிய நேரத்தில் நிறைய பேரின் பேட் இப்படி நின்று விடுவதை நான் பலமுறை பார்த்துள்ளேன். எனவே அதை நாங்கள் துரதிஷ்டம் என்று தான் எடுத்துக் கொள்கிறோம். மேலும் பைனலுக்கு செல்வதற்கு முன்பாக எங்களது அணியில் முன்னேற வேண்டியது இன்னும் நிறைய இருந்தது”

Kaur

“அத்துடன் முக்கிய நேரங்களில் நாங்கள் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்படவில்லை. அனைத்து துறைகளிலும் நீங்கள் அசத்தினால் மட்டுமே ஃபைனலுக்கு செல்ல முடியும். எனவே இதை துரதிஷ்டவசமாக நான் நினைக்கிறேன்”

இதையும் படிங்க: IND vs AUS : அந்த இந்திய வீரரை பாத்து எப்படி பேட்டிங் பண்ணனும்னு கத்துக்கோங்க – மைக் ஹஸ்ஸி அட்வைஸ்

“ஆனால் நிச்சயமாக ஸ்கூல் பெண் தவறு செய்தது போல் கிடையாது. நாங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தேவையான முதிர்ச்சியை கொண்டிருக்கிறோம். எனவே அவர் சொன்னது அனைத்தும் அவருடைய கண்ணோட்டமாகும். ஆனால் அது அவ்வாறு அமையவில்லை என்று நான் நினைக்கிறேன்” என கூறினார்.

Advertisement