IND vs AUS : அந்த இந்திய வீரரை பாத்து எப்படி பேட்டிங் பண்ணனும்னு கத்துக்கோங்க – மைக் ஹஸ்ஸி அட்வைஸ்

Hussey
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் ஆஸ்திரேலியா அணியானது இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் ஆஸ்திரேலியா அணியானது இம்முறையாவது இந்த தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

IND vs AUS

- Advertisement -

ஆனால் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் தோல்வியை சந்தித்து இந்த முறையும் தொடரை கைப்பற்றும் வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி தவற விட்டுள்ளது. அதுமட்டும் இன்றி வழக்கமாகவே மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆஸ்திரேலிய வீரர்கள் இம்முறை இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கு எதிராக ரன்களை குவிக்க தடுமாறி வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை பார்த்து எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என கற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் வீரரான மைக்கல் ஹசி வெளிப்படையாக சில அட்வைஸ்களை கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Steve Smith Virat Kohli IND vs AUS

இந்திய வீரர்கள் இங்குள்ள ஆடுகளத்தில் தான் வளர்ந்து இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு இந்தியாவில் எப்படி விளையாட வேண்டும் என்பது நன்றாக தெரியும். எனவே நான் சொல்வதை கேட்டுவிட்டு உடனடியாக ரோகித்தை அப்படியே காப்பி அடித்து விளையாட வேண்டும் என்று நினைக்க வேண்டாம்.

- Advertisement -

ஒவ்வொரு வீரர்களும் மேத்யூ ஹைடன் போன்று அதிரடியாக விளையாட முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கிறது. எனவே உங்களது திறனை சரியாக பயன்படுத்துங்கள். ரோகித் சர்மா இந்த டெஸ்ட் தொடரில் ஸ்பின் பவுலர்களுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடினார். அவர் பந்தினை பார்த்து அதற்கேற்றாற்போல் விளையாடினார்.

இதையும் படிங்க : IND vs AUS : 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாட நான் தயார் – ஆஸி வீரர் அறிவிப்பு

எனவே அவரைப்போன்று பந்துகளை பார்த்து பயிற்சி செய்யுங்கள். ஒருசில வீரர்கள் பவுண்டரிகளை அடித்து விளையாடுவார்கள். ஒருசில வீரர்கள் ஆங்கர் ரோல் செய்வார்கள். எனவே எல்லாராலும் ஒரேமாதிரி விளையாட முடியாது. உங்களுடைய பலம் என்ன என்று புரிந்து கொண்டு அதனை சரியாக செயல்படுத்தினால் நிச்சயம் உங்களால் ரன்களை குவிக்க முடியும் என்று மைக்கில் ஹசி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement