IND vs AUS : 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாட நான் தயார் – ஆஸி வீரர் அறிவிப்பு

Aus
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் பரிதாபத் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா அணியானது தற்போது இந்த நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

IND vs AUS

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அவர்களால் தொடரை சமன் செய்யவாது வாய்ப்பு கிடைக்கும். அப்படி இல்லையெனில் இந்திய அணியிடம் தொடரை இழக்க நேரிடும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் ஆஸ்திரேலியா அணியானது தொடர்ச்சியாக இந்திய அணியிடம் டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்து வருவது அந்நாட்டு ரசிகர்களுக்கு வருத்தமாக மாறியுள்ளது. மேலும் ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு எதிராக எளிதாக தோற்பதால் அந்த அணியின் மீது பல்வேறு கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன.

Cameron Green 1

அதுமட்டுமின்றி இந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பல வீரர்கள் காயம் காரணமாக அந்த அணியிலிருந்து வெளியேறியதோடு, கேப்டன் பேட் கம்மின்ஸ்-சும் நாடு திரும்பியுள்ளதால் 3 ஆவது போட்டியில் அவர் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது ஆஸ்திரேலியா அணி பலம் இழந்து காணப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் அந்த அணிக்கு வலு சேர்க்கும் விதமாக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட தயார் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய கேமரூன் கிரீன் கூறுகையில் : முதல் இரண்டு போட்டிகளையும் நான் காயம் காரணமாக தவற விட்டு விட்டேன். கடந்து இரண்டாவது போட்டியின் போது நான் விளையாடியிருக்க வேண்டியது தான்.

இதையும் படிங்க : தொடரும் தோல்விகள் – சத்தமின்றி ஐசிசி நாக் அவுட்டில் சொதப்பி வரும் மந்தனா, அடித்து நொறுக்கும் ஹர்மன்ப்ரீத் – புள்ளிவிவரம்

ஆனால் கடைசி நேரத்தில் முழு உடற்தகுதியை எட்ட முடியாமல் போய்விட்டது. ஆனால் தற்போது நான் 100 சதவீதம் அடுத்த போட்டியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். எனவே நிச்சயம் மூன்றாவது போட்டியில் விளையாடுவேன் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement