ரஞ்சி கோப்பைலாம் விளையாட முடியாது, ஸ்ட்ரய்ட்டா ஐபிஎல் தான் – அடம் பிடிக்கும் இந்திய வீரர்

IND
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்டிக் பாண்டியா கடந்த 2019 உலகக் கோப்பைக்குப் பின் இந்திய அணியில் இடம்பிடிக்க தடுமாறி வருகிறார். கடந்த 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு பின் இந்திய அணியின் முக்கிய வீரராக உருவெடுத்த ஹர்திக் பாண்டியா கபில் தேவுக்கு பின் ஒரு நல்ல வேகப்பந்து ஆல்ரவுண்டர் கிடைத்து விட்டார் என்ற நம்பிக்கையை இந்திய ரசிகர்களுக்கு ஊட்டினார்.

Pandya-2

- Advertisement -

ஆனால் கடந்த 2019 உலகக்கோப்பைக்கு பின் காயத்தால் இந்திய அணியில் இருந்த விலகிய அவர் அதில் இருந்து குணமடைந்த பின் உள்ளூர் கிரிக்கெட்டில் பங்கேற்காமல் ஐபிஎல் 2021 தொடரில் மட்டும் விளையாடினார். அதிலும் கூட பந்து வீசாமல் பேட்டிங் மட்டும் செய்த அவரை நம்பி கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 தொடருக்கு இந்திய தேர்வுக் குழுவினர் தேர்வு செய்தனர்.

ஏமாற்றிய பாண்டியா:
குறிப்பாக டி20 உலகக்கோப்பையின் போது ஹர்திக் பாண்டியா இந்தியாவுக்கு பந்து வீசுவார் என தேர்வுக்குழுவினர் கூறியிருந்தார்கள். ஆனால் உலக கோப்பை தொடங்கியபின் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் ஒரு ஓவர் கூட வீசாத அவர் எஞ்சிய போட்டிகளிலும் ஒரு சில ஓவர்களை மட்டுமே வீசியதால் அது இந்தியாவிற்கு நெருக்கடியை உண்டாக்கி இறுதியில் நாக் அவுட் சுற்றுக்கு கூட செல்லமுடியாத படுமோசமான தோல்வியை பரிசளித்தது.

Pandya

தனது காயம் பற்றி முழுமையாக தெரிவிக்காத ஹர்திக் பாண்டியாவை அந்த உலகக்கோப்பையுடன் இந்திய அணி நிர்வாகம் கழட்டி விட்டது. அதன்பின்னும் கூட பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் சென்று பயிற்சியில் ஈடுபடாத அவர் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வந்தார்.

- Advertisement -

ரஞ்சி கோப்பை வேண்டாம்:
அந்த வேளையில் ஐபிஎல் 2022 தொடரில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்டிக் பாண்டியா ஒப்பந்தமாகியுள்ளார். எனவே ஐபிஎல் தொடரில் பந்து வீசுவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு “அது சர்ப்ரைஸ்” என கடந்த சில தினங்களுக்கு முன் பதில் அளித்திருந்தார்.

Pandya

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் துவங்குவதாக இருந்த இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையின் முதல் பாகம் பல தடைகளுக்கு பின் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி துவங்கவுள்ளது. நாக் அவுட் போட்டிகள் அடங்கிய 2வது பாகம் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் வரும் மே மாதம் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடருக்கு முன் முழுமையாக பயிற்சி எடுக்க ஒரு பொன்னான வாய்ப்பாக ரஞ்சி கோப்பை நடைபெற உள்ளது. ஆனால் அதில் ஹர்திக் பாண்டியா பங்கேற்கவில்லை என தற்போது தெரியவந்துள்ளது.

- Advertisement -

நேராக ஐபிஎல் தான்:
ஆம் ரஞ்சி கோப்பையில் பங்கேற்கும் பரோடா கிரிக்கெட் அணியில் ஹர்திக் பாண்டியாவின் பெயர் இடம்பெறவில்லை. அந்த அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விளையாடும் அணியில் கூட அவரின் பெயர் இடம் பெறாதது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அவருக்கு பதில் மற்றொரு வீரர் கேதார் தேவ்தார் பரோடா அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார்.

இதையும் படிங்க : கோலியின் பேட்டிங், தோனியின் கேப்டன்ஷிப் இரண்டும் கலந்த கலவையாக இருக்கும் இளம் வீரர் – யார் தெரியுமா?

இந்தியாவின் எத்தனையோ ஜாம்பவான்கள் காயம் அடையும் போதும் பார்ம் இழக்கும் போதும் ரஞ்சி கோப்பைக்கு திரும்பி தங்களது பாரம்மை மீட்டெடுத்து பின் இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடியுள்ளார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பாக விளங்கும் ரஞ்சி கோப்பையில் விளையாடாமல் நேரடியாக ஐபிஎல் தொடரில் தான் விளையாடுவேன் என ஹர்திக் பாண்டியா அடம்பிடிப்பது பல இந்திய ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஐபிஎல் 2022 சீசனில் ரூபாய் 15 கோடிகளுக்கு அகமதாபாத் அணியின் கேப்டனாக விளையாட அவர் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement