கோலியின் பேட்டிங், தோனியின் கேப்டன்ஷிப் இரண்டும் கலந்த கலவையாக இருக்கும் இளம் வீரர் – யார் தெரியுமா?

u-19
- Advertisement -

ஐசிசி அண்டர் 19 உலககோப்பை 2022 தொடரை வெற்றி பெற்றுள்ள இந்தியா 5வது முறையாக இந்த உலகக் கோப்பையை முத்தமிட்டு இந்த உலக கோப்பை வரலாற்றில் வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் துவங்கிய இந்த உலக கோப்பையில் டெல்லியைச் சேர்ந்த இளம் வீரர் “யாஷ் துள்” தலைமையில் களமிறங்கிய இந்தியா முதலில் நடந்த லீக் சுற்றில் 3 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு சென்றது.

U19 World Cup 2022

- Advertisement -

அதன்பின் நடந்த நாக்-அவுட் சுற்றில் நடப்பு சாம்பியன் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி சுற்றில் வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை சந்தித்தது. ஆண்டிகுவா நகரில் நடந்த மாபெரும் இறுதிப் போட்டியிலும் அபாரமாக செயல்பட்ட இந்திய அணியினர் இங்கிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்று சாதனை படைத்தனர்.

கேப்டன் யாஷ் துள்:
இந்த உலக கோப்பையை வெற்றி பெற்றதால் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் மிகச் சிறப்பாக இருப்பதை எண்ணி இந்திய ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்கள். இந்த உலக கோப்பையில் கேப்டனாகவும் பேட்டராகவும் அபாரமாக செயல்பட்ட யாஷ் துள் 5வது முறையாக இந்தியா கோப்பையை கையில் ஏந்த முக்கிய பங்காற்றினார் என்றே கூறலாம்.

IND-u-19-1

ஏனெனில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த முதல் போட்டியில் 82 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றிய இவர் திடீரென அதன்பின் நடந்த 2 லீக் போட்டிகளில் கரோனா காரணமாக தனிமைப் படுத்தப்பட்டார். இருப்பினும் முக்கியமான நாக்அவுட் சுற்றுக்கு திரும்பிய அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சதம் அடித்து 110 ரன்களை விளாசி இந்தியாவை பைனலுக்கு அழைத்து சென்றார்.

- Advertisement -

தோனி – கோலி போல:
இதன் வாயிலாக அண்டர் 19 உலக கோப்பை வரலாற்றில் சதமடித்த 3வது இந்திய கேப்டன் என்ற பெருமையை அவர் விராட் கோலி (2008), உன்முக்த் சந்த் (2012) அகியோருக்கு பின் பெற்றார். இந்த மூவருமே டெல்லியை சேர்ந்தவர்கள் என்பதும் இவர்கள் சதம் அடித்த ஆண்டுகளில் இந்தியா உலகக்கோப்பையை வெ�