Hardik Pandya : ஆட்டநாயகன் விருதை நான் இவர்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் – ஹார்டிக் பாண்டியா

Hardik
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 15 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 59 ரன்களை குவித்தார்.

Dhoni

- Advertisement -

பிறகு 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி துவக்கத்திலேயே சரிவை கண்டது. ராயுடு மற்றும் வாட்சன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மேலும், பின்னால் வந்த வீரர்களும் வரிசையாக நடையை கட்ட சென்னை அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஹார்டிக் பாண்டியா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் ஹார்டிக் பாண்டியா கூறியதாவது : போட்டியில் அணி வெற்றி பெறும்போது அதில் நமது பங்களிப்பு இருக்கும்போது அது நமக்கு மகிழ்ச்சியே. மேலும், கடந்த 7 மாத காலமாக எனக்கு கடினமாக காலமாக இருந்தது. இந்த ஆட்டநாயகன் விருதினை இந்த 7 மாதங்களாக என்னை ஆதரித்தவர்களுக்கும், எனது ரசிகர்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன்.

Hardik

மேலும், என்னால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். அதன் காரணம் தொடர்ச்சியாக வலைப்பயிற்சியில் நான் செய்த பயிற்சியே. இந்த போட்டியில் எனது ஆட்டத்திற்கு அதுவே காரணம். மேலும், வரும் உலகக்கோப்பையினை இந்திய அணி வெல்ல வேண்டும். அதில் எனது பங்களிப்பும் இருக்கவேண்டும் என்று பாண்டியா கூறினார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே : MS Dhoni : செய்த தவறுக்காக தோனியிடம் கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட சி.எஸ்.கே வீரர் – வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.

Advertisement