உலககோப்பை தொடரில் இருந்து வெளியேறிய பின்னர் ஹார்டிக் பாண்டியா பகிர்ந்த – நெகிழ்ச்சியான பதிவு

Hardik-Pandya
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் 7 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணியானது அனைத்திலுமே வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதல் அணியாக ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது.

அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள இரண்டு லீக் ஆட்டங்களில் நவம்பர் 5-ஆம் தேதியான இன்று தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகவும், நவம்பர் 12-ஆம் தேதி நெதர்லாந்து அணிக்கு எதிராகவும் விளையாடுகிறது. இந்த இரண்டு போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தால் கூட எந்த ஒரு பிரச்சனையும் இன்றி அரையிறுதி போட்டியில் விளையாடும்.

- Advertisement -

அப்படி நடைபெறும் அரையிறுதி போட்டியிலும் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறும். இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் முக்கிய வீரராக பார்க்கப்பட்ட ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா ஆரம்பத்திலிருந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்த வேளையில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது பந்தை தடுக்க முயன்று கணுக்காலில் காயமடைந்தார்.

இதன் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறி பெங்களூரு சென்று தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மேற்கொண்டு வந்த பாண்டியா அரையிறுதிக்கு முன்னதாக இந்திய அணியில் இணைவார் என்று பேசப்பட்ட வேளையில் காயம் இன்னும் குணமடையாததால் உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறினார்.

- Advertisement -

அப்படி ஹார்டிக் பாண்டியா இந்த தொடரில் இருந்து வெளியேறியதன் பின்னர் ரசிகர்கள் பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்தனர். அதோடு இந்திய அணிக்கு இது ஒரு மிகப்பெரிய பின்னடைவு என்றும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் உலககோப்பை தொடரில் இருந்து வெளியேறிய பின்னர் தற்போது முதல் முறையாக தனது டிவிட்டர் பக்கத்தில் பாண்டியா ஒரு நெகிழ்ச்சியான கருத்தினை பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது :

இதையும் படிங்க : பாகிஸ்தானின் வெற்றியால் 4 ஆவது இடத்தில் ஏற்பட்டுள்ள கடும் போட்டி – அரையிறுதிக்கு தகுதிபெறப்போவது யார்?

உலக கோப்பையின் எஞ்சிய போட்டிகளை நான் இழக்க நேரிடும் என்ற உண்மையை ஜீரணிக்க கடினமாக உள்ளது. இருந்தாலும் இனிவரும் ஒவ்வொரு ஆட்டத்தின் ஒவ்வொரு பந்திலும் இந்திய அணியினை உற்சாகப்படுத்தி அவர்களுக்கு ஆதரவாக துணை நிற்பேன். மனதளவில் அணியுடன் தான் இருப்பேன். நான் குணமடைய வாழ்த்து தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என பாண்டியா பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement