
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் போட்டியில் விளையாடிய ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்ததோடு சேர்த்து புள்ளி பட்டியலில் தற்போது ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த தொடரினை தோல்வியுடன் ஆரம்பித்த மும்பை அணியானது தற்போது மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது அந்த அணி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன்ரைசஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி 18.1 ஓவரிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் நாங்கள் பந்து வீசியது மிகச் சிறப்பாக இருந்தது. எங்களுடைய திட்டத்தை சரியாக செயல்படுத்தியதாக உணர்கிறோம். இந்த போட்டியின் போது நாங்கள் எதிரணியின் வீரர்களை எளிதாக பேட்டிங் செய்ய விடவில்லை.
அவர்களது இயல்பான ஷாட்டுகளை விளையாடக்கூடாது என்பதற்காகவே சரியான ஏரியாவில் பந்து வீசினோம். இந்த போட்டியில் அவர்களை இவ்வளவு குறைந்த ரன்களில் சுருட்டியதற்கு எங்களது பந்துவீச்சார்களின் மிகச் சிறப்பான செயல்பாடே காரணம். இந்த மைதானத்தை பொருத்தவரை பசுமையாகவும், புற்கள் நிறைந்ததாகவும் இருந்ததால் நல்ல உதவி கிடைத்தது.
இதையும் படிங்க : பேட்டிங்கில் நாங்க பண்ண இந்த தப்பு தான் மும்பை அணிக்கெதிரான தோல்விக்கு காரணம் – பேட் கம்மின்ஸ் பேட்டி
தீபக் சாகர் முதல் ஓவரை வீசியதுமே இந்த மைதானத்தில் ஸ்லோ பந்துகளை வீசினால் சிறப்பாக இருக்கும் என்று உணர்ந்தோம். அந்த வகையிலே முற்றிலுமாக பந்துவீச்சில் அவர்களை கட்டுப்படுத்தியே இந்த வெற்றியை நாங்கள் பெற்றுள்ளோம் என ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.