பேட்டிங்கில் நாங்க பண்ண இந்த தப்பு தான் மும்பை அணிக்கெதிரான தோல்விக்கு காரணம் – பேட் கம்மின்ஸ் பேட்டி

Pat Cummins
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹார்டிக் பாண்டியா முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.

மும்பை அணிக்கெதிராக நாங்க தோக்க இதுவே காரணம் : பேட் கம்மின்ஸ்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 40 ரன்களையும், ஹென்றிச் கிளாசன் 37 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 18.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை குவித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 36 ரன்களையும், ரயன் ரிக்கல்டன் 31 ரன்களையும் குவித்தனர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் : உண்மையிலேயே இந்த மைதானம் விளையாடுவதற்கு எளிதான மைதானம் கிடையாது. இருந்தாலும் நாங்கள் வெற்றிக்கான ரன்களை குறைவாக குவித்து விட்டதாக நினைக்கிறேன். பேட்டிங்கில் இன்னும் சற்று கூடுதலான ரன்களை குவித்திருக்க வேண்டும். அப்படி குவித்து இருந்தால் இரண்டாம் பாதியில் எங்களால் அவர்களுக்கு அழுத்தத்தை கொடுத்திருக்க முடியும்.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி எங்களை வீழ்த்தி விட்டனர். நாங்கள் எங்கெல்லாம் அடிக்க நினைத்தோமோ அங்கெல்லாம் பந்துவீசாமல் சரியான ஏரியாவில் பந்துவீசி எங்களை நிப்பாட்டி விட்டனர். அடிப்படை விடயத்தில் நாங்கள் சரியாக செயல்பட்டு இருந்தாலும் ரன் குவிப்பில் கோட்டை விட்டு விட்டோம்.

இதையும் படிங்க : பஞ்சாப் அணியில் 2 ஆவது வருஷமே எனக்கு அந்த பொறுப்பு வந்துடுச்சி.. அதனால கவனமா இருக்கேன் – அர்ஷ்தீப் சிங் கருத்து

அதேபோன்று பந்துவீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே இந்த போட்டியில் வெற்றி பெறமுடியும் என்கிற நிலையில் பெரிய அளவில் எங்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை இருந்தாலும் இது போன்ற போட்டிகள் நல்ல பாடங்களை கற்றுத்தரும். அதை வைத்து நிச்சயம் அடுத்த ஹோம் கிரவுண்ட் மேட்சில் மிக வலுவாக திரும்புவோம் என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement