இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடிய 6 போட்டிகளில் நான்கு வெற்றி மற்றும் இரண்டு தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. மேலும் பஞ்சாப் அணி தங்களது அடுத்த போட்டியில் ஏப்ரல் 18-ஆம் தேதி பெங்களூரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
பஞ்சாப் அணியில் நான் சீனியராக உணர்கிறேன் : அர்ஷ்தீப் சிங்
இந்த தொடரில் அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு வீரர்களும், இளம் இந்திய வீரர்களும் நிறைந்திருப்பதால் பஞ்சாப் அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதோடு முன்பை விட பந்துவீச்சு கூட்டணியிலும் நல்ல பலம் இருப்பதால் பஞ்சாப் அணியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளாக பஞ்சாப் அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்துவரும் அவர் எதிர்வரும் போட்டிக்கு முன்பாக பஞ்சாப் அணியில் இடம் பிடித்து விளையாடுவது குறித்து ஒரு சில நெகிழ்ச்சியான கருத்துக்களை பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கடந்த ஏழு ஆண்டுகளாக விளையாடி வருகிறேன்.
பஞ்சாப் அணியில் இணைந்த முதல் வருடத்தை தவிர மற்ற அனைத்து வருடங்களிலும் நான் தான் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக இருப்பதாக உணர்கிறேன். ஏனெனில் பஞ்சாப் அணியில் இணைந்த முதல் ஆண்டுக்கு பிறகு இரண்டாம் ஆண்டிலிருந்து நான் சீனியாரிட்டியை உணர ஆரம்பித்தேன். எனவே ஒவ்வொரு ஆண்டும் நான் பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரராக விளையாடி வருவதால் எந்த ஒரு வேளையிலும் நான் தவறு செய்ய முடியாது.
ஏனெனில் அணியின் முக்கிய வீரராக இருக்கும் நானே தவறு செய்தால் அது அணிக்கு மேலும் சிக்கலை தரும். எனவே ஒரு மூத்த வீரர் என்ற வகையில் நான் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று என்னுடைய முழு உழைப்பையும் வெளிப்படுத்தி வருகிறேன் என அர்ஷ்தீப் சிங் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : கழட்டிவிடப்பட இருக்கும் ரவிச்சந்திரன் அஷ்வின்.. முதல்முறையாக வாய்ப்பை பெறயிருக்கும் வருண் – வெளியான அப்டேட்
பஞ்சாப் அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவருக்கு விரைவிலேயே இந்திய அணியில் இடம் கிடைத்ததோடு சேர்த்து டி20 உலக கோப்பை தொடரை வென்ற இந்திய அணியிலும் அவருக்கு இடம் கிடைத்திருந்தது. தற்போது இந்திய அணியில் நட்சத்திர வீரராக விளையாடும் அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரின் மெகா ஏலத்திற்கு முன்பாக 18 கோடி ரூபாய்க்கு தக்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.



