IND vs NZ : நாங்க ஜெயிச்சிருந்தாலும் இந்த விஷயம் எங்களுக்கு ரொம்ப ஷாக்கா இருந்துச்சி – ஹார்டிக் பாண்டியா வருத்தம்

Hardik-Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்க பிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து வெறும் 99 ரன்களை மட்டுமே குவித்தது.

IND-vs-NZ

- Advertisement -

பின்னர் 100 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியும் இறுதிவரை போராடி பெரிய போராட்டத்திற்கு பிறகு கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மைதானம் முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்ததால் எந்த ஒரு பேட்ஸ்மேனாலும் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறுகையில் : நிச்சயம் இந்த போட்டியில் வெற்றி பெற முடியும் என்று உறுதியாக நம்பினோம். ஆனாலும் இவ்வளவு தாமதமாக வெற்றி கிடைத்ததில் சற்று வருத்தம் தான். இது போன்ற மைதானங்களில் விளையாடுவதும் எங்களுக்கு முக்கியமான ஒன்று.

Hardik Pandya IND vs NZ

ஏனெனில் முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் இது போன்ற மைதானங்களில் இறுதி வரை பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் பொறுமையாக ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்து விளையாடி எங்கள் மீதுள்ள அழுத்தத்தை குறைத்துக் கொண்டோம்.

- Advertisement -

இறுதியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. ஆனாலும் இந்த மைதானத்தை பார்க்கும் போது எங்களுக்கு மிகவும் ஷாக்கிங்காக இருந்தது. ஏனெனில் இரண்டு அணிகளுமே பேட்டிங் செய்ய இந்த மைதானத்தில் மிகவும் கஷ்டப்பட்டோம். நிச்சயம் இந்த இரண்டு பிட்ச்களும் டி20 கிரிக்கெட்க்கு சாதகமான மைதானங்கள் கிடையாது. எனவே இதுபோன்ற மைதானங்களை தயார் செய்யும் போது மைதான தயாரிப்பாளர்கள் சற்று சில விடயங்களை கவனிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் இல்லனாலும் பார்டர் – கவாஸ்கர் தொடரில் அவர நெனச்சா ஆஸி அணிக்கு பயமா தான் இருக்கு – மார்கஸ் ஸ்டோய்னிஸ் பேட்டி

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்த போட்டியில் நமது அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அருமையாக பந்துவீசி நியூசிலாந்து வீரர்களை சுருட்டினர். அதேபோன்று நியூசிலாந்து வீரர்கள் இந்திய வீரர்களை விட பந்தினை அதிகமாக சுழல வைத்தனர் என்று ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement