ரிஷப் பண்ட் இல்லனாலும் பார்டர் – கவாஸ்கர் தொடரில் அவர நெனச்சா ஆஸி அணிக்கு பயமா தான் இருக்கு – மார்கஸ் ஸ்டோய்னிஸ் பேட்டி

stoinis
- Advertisement -

2023 ஜூலை மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் அணிகளை வரும் பிப்ரவரி மாதம் இந்திய மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தீர்மானிக்க உள்ளது. அதில் ஏற்கனவே புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா ஃபைனல் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டதால் 2004க்குப்பின் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க போராட உள்ளது. அதை விட 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பையில் அடுத்தடுத்த தோல்விகளை கொடுத்த இந்தியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்க்க ஆஸ்திரேலியா முழு மூச்சுடன் போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

AUs vs IND

- Advertisement -

அதற்காக பெரிய சவாலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரவிச்சந்திரன் அஷ்வினை எதிர்கொள்ள தேவையான திட்டங்களை ஏற்கனவே தயார்படுத்தி விட்டதாக மார்னஸ் லபுஸ்ஷேன், மாட் ரென்ஷா போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் சமீபத்தில் தெரிவித்தனர். அத்துடன் கடைசியாக 2004இல் வென்ற அணியில் இருந்த தரமும் திறமையும் தற்போதைய அணியிலும் இருப்பதால் இம்முறை நிச்சயம் ஆஸ்திரேலியா இத்தொடரை வெல்லும் என்று தெரிவித்த முன்னாள் ஜாம்பவான் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் அதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

பண்ட் இல்லனாலும்:
அத்துடன் எப்போதும் இந்திய மண்ணில் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் இருக்கும் என்பதால் அதற்கேற்றார் போல் எக்ஸ்ட்ரா ஸ்பின்னர்களை வைத்து விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்திய மண்ணில் வெல்வது கடினம் என்றாலும் இம்முறை அதை உடைப்பதற்கு தேவையான வீரர்களுடன் ஆஸ்திரேலியா வருவதால் நிச்சயம் வெல்லும் என்று அந்த அணி வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் காபா வெற்றி உட்பட ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக செயல்படக்கூடிய ரிசப் பண்ட் இல்லையென்றாலும் விராட் கோலி மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுப்பார் என தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பது மிகவும் கடினம் என்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் எப்போதும் வலுவான அணி. குறிப்பாக சொந்த மண்ணில் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்களது அணியில் ஆழமான பேட்டிங் வரிசையும் எளிதாக விக்கெட்டுகளை எடுத்து அழுத்தத்தை கொடுக்கக்கூடிய ஸ்பெசலிஸ்ட் ஸ்பின்னர்களும் இருக்கிறார்கள் என்பதையும் நாங்கள் அறிவோம். ஆனால் அதை எதிர்கொள்ள நாங்களும் தரமான அணியை கொண்டுள்ளோம். எங்களது அணியிலும் ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர்கள் உள்ளனர்”

- Advertisement -

“அதனால் இம்முறை நாங்கள் கோப்பையை இழக்க தயாராக இல்லை. எப்போதுமே தோல்வியை விரும்பாத நாங்கள் இம்முறை தோற்றால் அது 3வது முறையாக தோல்வியாகி விடும். அதனால் நாங்கள் இம்முறை விட்டுக் கொடுப்பதாக இல்லை. இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் போது சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் விளையாட வேண்டும் என்பதால் அதற்கு தகுந்தாற்போல் எங்களது அணியும் வலுவாக உள்ளது. இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா போன்ற ஸ்பெசலிஸ்ட் ஸ்பின்னர்கள் இருப்பது போல் எங்களது அணியிலும் போட்டிக்கு ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர்கள் உள்ளனர்”

Stoinis

“அதே போல் உலகத்தரமாய்ந்த வீரரான விராட் கோலி ஃபார்முக்கு திரும்பியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரரான அவர் மீண்டும் எங்களுக்கு இந்த தொடரில் மிகப்பெரிய பயத்தை கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் நாங்களும் தவற விடும் ஒரு வீரர் யார் என்றால் அது ரிசப் பண்ட் ஆவார். துரதிஷ்டவசமாக இந்திய அணியில் இல்லாத அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்” என்று துபாயில் நடைபெறும் ஐஎல் டி20 தொடரில் விளையாடும் அவர் ஆஸ்திரேலியா அணியில் இடம் பெறவில்லை என்றாலும் தங்களது அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வீடியோ : அன்று இன்றும் குழந்தையாய் அழுத ஷபாலி வர்மா – கேப்டனாக வென்று தோனிக்கு நிகராக சரித்திர சாதனை

முன்னதாக கடைசி 2 தொடர்களில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே தெறிக்க விட்ட இந்தியா 2012க்குப்பின் தங்களது சொந்த மண்ணில் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தோல்வியடையவில்லை என்பதால் நிச்சயம் இம்முறையும் வெல்லும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement