அன்று இன்றும் குழந்தையாய் அழுத ஷபாலி வர்மா – கேப்டனாக வென்று தோனிக்கு நிகராக சரித்திர சாதனை

Shafali Verma
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவில் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற ஐசிசி மகளிர் அண்டர்-19 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்று சரித்திரம் படைத்தது. கடந்த 2000 முதல் ஆடவர் கிரிக்கெட்டில் நடைபெறும் இத்தொடர் இளம் வீரர்களின் பிறப்பிடமாக கருதப்படும் நிலையில் முதல் முறையாக மகளிர் கிரிக்கெட்டில் ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 14 தேதி முதல் நடைபெற்ற இத்தொடரில் உலகம் முழுவதிலுமிருந்து மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற நிலையில் ஷபாலி வர்மா தலைமையில் களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் 3 வெற்றிகளுடன் முதலிடம் பிடித்தது.

அதை தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் 6 சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தாலும் இலங்கையை தோற்கடித்து ரன்ரேட் உதவியுடன் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற இந்தியா ஆடவர் கிரிக்கெட்டிலேயே காலம் காலமாக தோல்வியை பரிசளித்து வரும் நியூசிலாந்தை அரையிறுதியில் தோற்கடித்து அசத்தியது. அதைத்தொடர்ந்து ஜனவரி 29ஆம் தேதியன்று நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாத இங்கிலாந்து வெறும் 68 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

அழுகையும் சாதனையும்:
அதிகபட்சமாக மெக்டொனால்ட்-கே 19 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக டைட்டஸ் சாது, பர்சவி சோப்ரா, அர்ச்சனா தேவி ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்ந்தனர். அதைத்தொடர்ந்து 69 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஷபாலி வர்மா 15, ஸ்வேதா ஷெராவத் 5 என தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் திரிஷா 24 ரன்களும் சௌமியா திவாரி 24* ரன்களும் எடுத்து 14 ஓவரில் 69/3 ரன்களை எடுக்க வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

அதனால் வரலாற்றின் முதல் அண்டர் 19 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியா சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு ஐசிசி கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. மேலும் மகளிர் கிரிக்கெட்டில் ஒரு ஐசிசி கோப்பையை வென்ற முதல் ஆசிய அணி என்ற வரலாற்றையும் படைத்த இந்திய கிரிக்கெட் அணியை இதர வீராங்கனைகளை காட்டிலும் அனுபவிக்க ஷபாலி வர்மா மிகச் சிறப்பாக வழி நடத்தினார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

தனது 15 வயதில் கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமான அவர் சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் விளையாடிய இந்தியர் மற்றும் மிகவும் இளம் வயதில் அரை சதமடித்த இந்தியர் ஆகிய சச்சின் டெண்டுல்கரின் சாதனை தகர்த்து தனது கேரியரை துவங்கினார். மேலும் தொடக்க வீராங்கனையான அவர் ஆரம்பம் முதலே பவர்பிளே ஓவரில் அதிரடியாக ரன்களைக் குவித்து ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார். நாளடைவில் அவரது அதிரடி ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் இந்திய ஜாம்பவான் வீரேந்திர சேவாக் போலவே விளையாடுவதை கண்டு லேடி சேவாக் என்று மனதார பாராட்டு தொடங்கினார்கள்.

அந்த நிலையில் ஆஸ்ரேலியாவில் நடைபெற்ற 2020 மகளிர் டி20 உலக கோப்பையில் 163 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த இந்திய வீராங்கனையாக சாதனை படைத்த அவர் பைனல் வரை முன்னேறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். ஆனால் மாபெரும் பைனலில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த அவர் கடைசியில் இந்தியா தோற்ற போது மந்தனா, ஹர்மன்ப்ரீத் போன்ற இதர வீராங்கனைகளை விட உணர்சியை கட்டுப்படுத்த முடியாமல் குழந்தையைப் போல் தேம்பி அழுது ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தார்.

- Advertisement -

அப்படியே காலங்கள் உருண்டோடிய நிலையில் இன்னும் 19 வயதை கடக்காத காரணத்தால் சீனியர் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவத்தை கருத்தில் கொண்டு இத்தொடரில் அவர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். அதில் அபாரமாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுத்த அவர் அண்டர்-19 மகளிர் டி20 உலக கோப்பை வென்ற முதல் கேப்டன் என்ற சரித்திரத்தை படைத்துள்ளார். இப்போதும் தனது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாத அவர் கோப்பையை வெல்வதற்கு முன்பாக குழந்தையாகவே தேம்பி அழுதார்.

இதையும் படிங்க: அண்டர்-19 உ.கோ வென்ற இந்திய அணிக்கு பிரம்மாண்ட பரிசுத்தொகை அறிவித்த ஜெய் ஷா – ஸ்பெஷல் விருந்துக்கு அழைப்பு

குறிப்பாக இதே தென்னாபிரிக்காவில் கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பையை வென்ற கேப்டன் என்ற சாதனை படைத்த தோனிக்கு நிகரான சாதனையை படைத்துள்ள அவர் அன்று சிந்திய கண்ணீருக்கு பரிசாக இன்று கடினமாக உழைத்து வெற்றி கோப்பையுடன் மூவர்ண கொடியை போர்த்திக் கொண்டு மைதானத்தை வலம் வந்தது இந்திய ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement