GT vs MI : யாரையோ த்ரோ போடவிட்டு அடிக்கிற மாதிரி பொளந்து கட்டுறாரு – மும்பையை வீழ்த்திய பிறகு பேசிய பாண்டியா

Hardik Pandya
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் மிகமுக்கியமான இரண்டாவது குவாலிபயர் போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

MI-vs-GT

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்களை குவித்தது. குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் சுப்மன் கில் 60 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் என 129 ரன்கள் குவித்து அசத்தினார். அதேபோன்று தமிழக வீரர் சாய் சுதர்சன் 43 ரன்கள் குவித்தார்.

பின்னர் 234 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்களை மட்டுமே குவித்தது. அதன் காரணமாக குஜராத் அணியானது 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது மட்டுமின்றி சி.எஸ்.கே அணிக்கெதிராக நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் விளையாடவும் தகுதி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் : எங்களது அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களுமே பயிற்சியின் போது மிகவும் கடுமையாக உழைக்கின்றனர். அந்த உழைப்பின் வெளிப்பாடு தான் போட்டிகளில் அவர்கள் சிறப்பாக பந்துவீச காரணம். சுப்மன் கில் நல்ல தெளிவான மனநிலையுடனும், தன்நம்பிக்கையுடன் விளையாடி வருகிறார்.

- Advertisement -

இன்று அவர் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் எந்தவொரு இடத்திலும் அவசரத்தை காண்பிக்கவில்லை. அவரது திறன்களையே பயன்படுத்தி ரன்களை குவித்தார். யாரோ ஒருவரை த்ரோ போட வைத்து அடிக்கும் மாதிரி அவர் இன்று பவுலர்களை எதிர்கொண்டு அதிரடி காட்டினார்.

இதையும் படிங்க : IPL 2023 : தயவு செஞ்சு அதை மட்டும் செய்ங்க – ஃபைனலுக்கு முன்பாக சிஎஸ்கே வீரர்களுக்கு தோனி வைத்த முக்கிய கோரிக்கை என்ன

குஜராத் அணியின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சுப்மன் கில் இந்திய அணிக்கும் சூப்பர் ஸ்டாராக திகழப்போகிறார். இளம்வீரர்களுக்கான இடத்தினை வழங்கி அவர்களது திறனை வெளிப்படுத்த நாங்கள் வாய்ப்பினை தருகிறோம். அந்தவகையில் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளையும் சிறப்பாக பயன்படுத்தி கொள்கிறார்கள் என ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement