IND vs WI : இந்த போட்டியில் நாங்க தோக்க காரணமே இதுதான். பைனல்ல பாத்துக்கலாம் – கேப்டன் பாண்டியா பேட்டி

Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது நேற்று பார்படாஸ் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது முதல் விக்கெட்டுக்கு 90 ரன்களை சேர்த்து அசத்தியிருந்தாலும் அதன் பிறகு பெரிய சறுக்கலை சந்தித்தது.

Pandya-Toss

- Advertisement -

மிடில் ஆர்டரில் இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற இறுதியில் இந்திய அணியானது 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக இஷான் கிஷன் மட்டும் 55 ரன்கள் குவித்தார். பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 36.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ஷர்துல் தாகூர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் இந்து தொடரை சமன் செய்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் :

Hope

நாங்கள் இந்த போட்டியில் நினைத்த வகையில் பேட்டிங் செய்யவில்லை. முதல் இன்னிங்சை விட அவர்கள் பேட்டிங் செய்யும்போது மைதானம் இன்னும் சிறப்பாக மாறியது. இந்த தோல்வி எங்களுக்கு வருத்தம் அளித்தாலும் இந்த தோல்வியிலிருந்து பல்வேறு விடயங்களை கற்றுக் கொண்டோம். நமது அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இஷான் கிஷன் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். அது அணிக்கு மிகவும் முக்கியமானது. அதேபோன்று ஷர்துல் தாகூரும் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் அணி நல்ல ஆட்டத்தை விளையாடி வெற்றி பெற்றுள்ளனர். தற்போது நாங்கள் ஆமை போன்று நகர்ந்து வருகிறோம். முயலைப் போன்று கிடையாது நிச்சயம் உலக கோப்பையில் அனைத்தும் நல்லதாக நடக்கும்.

இதையும் படிங்க : Ashes 2023 : பீட்டர்சனின் சிக்ஸர்கள் சாதனையை உடைத்த பென் ஸ்டோக்ஸ் – சோபர்ஸ், காலிஸ் வரிசையில் தனித்துவ உலக சாதனை

இந்த போட்டியில் அடைந்த தோல்வி மூலம் எங்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டுள்ளது. தற்போது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளதால் அடுத்த போட்டி உங்களுக்கும் சரி, வீரர்களாகிய எங்களுக்கும் சரி ஒரு நல்ல போட்டியாக காத்திருக்கிறது என ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement