INDvsPAK : கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து ஜெயிக்க இதுவே காரணம் – ஆட்டநாயகன் பாண்டியா பேட்டி

Hardik Pandya
- Advertisement -

பாகிஸ்தான் அணிக்கு எதிராக அடித்த கடைசி சிக்ஸர் பற்றி பேசிய ஹார்டிக் பாண்டியாவின் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை லீக் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணி பந்து வீசுவதாக அறிவித்தார்.

INDvsPAK

- Advertisement -

அதன்படி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியானது 19.5 ஓவர்களில் பாகிஸ்தான அணியை 147 ரன்களுக்கு ஆல்அவுட் செய்தது. இந்திய அணி சார்பாக புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்களையும், ஹார்டிக் பாண்டியா மூன்று விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினர்.

பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 33 ரன்கள் அடித்து அணியை வெற்றி வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அதோடு ஜடேஜா மற்றும் விராட் கோலி ஆகியோர் 35 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

IND vs PAK Hardik Pandya Dinesh Kathik Rizwan

இந்நிலையில் இந்த போட்டியின் போது பரபரப்பான கடைசி ஓவரில் வெற்றிக்கு ஏழு ரன் தேவைப்பட்டது. அப்போது பாகிஸ்தான அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் தங்களது ஓவர்களை முடித்து விட்டதால் வேறு வழியின்றி சுழற்பந்து வீச்சாளரான முகமது நவாஸ் பந்துவீச வந்தார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா ஆட்டமிழந்து வெளியேற அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக் சிங்கள் எடுத்தார்.

- Advertisement -

மூன்றாவது பந்தில் ரன் ஏதும் வராததால் கடைசி மூன்று பந்துகளில் ஆறு ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நான்காவது பந்தை சந்தித்த பாண்டியா பிரம்மாண்டமான சிக்சரை விளாசி அணிக்கு வெற்றியை பெற்று தந்தார். இந்நிலையில் இந்த பரபரப்பான கடைசி ஓவரில் அவர் அடித்த சிக்ஸர் குறித்து பேசிய பாண்டியா கூறுகையில் : கடைசி ஓவரை ஒரு ஸ்பின்னர் தான் வீசப் போகிறார் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

இதையும் படிங்க : விராட் கோலியின் பயோபிக் படத்தில் நான் நடிக்கனும். அதுவே என் ஆசை – பிரபல இளம் நடிகர் விருப்பம்

அதோடு அந்த கடைசி ஓவரில் ஏழு ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் 15 ரன்கள் வரை தேவைப்பட்டிருந்தாலும் நிச்சயம் நான் அடித்திருப்பேன். ஏனெனில் கடைசி இரு ஓவர்களில் பேட்ஸ்மேன்களை விட பவுலர்கள் தான் நெருக்கடியில் இருப்பார்கள் அதுவும் அனுபவம் இல்லாத ஸ்பின்னர் என்பதால் எனக்கு முழு நம்பிக்கை இருந்தது என பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement