
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஹர்திக் பாண்டியா கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 114 டி20 போட்டிகள், 86 ஒருநாள் போட்டிகள் மற்றும் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதிரடியான பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் கை கொடுக்கும் ஹார்டிக் பாண்டியா இந்திய அணியின் நட்சத்திர வீரராக கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.
அவர் எப்போது எல்லாம் சிறப்பாக செயல்படுகிறாரோ அப்போதெல்லாம் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது பந்துவீச்சாளராக அசத்திய அவர் இந்திய அணியின் வெற்றிக்கும் மிக முக்கியமான காரணமாக திகழ்ந்திருந்தார்.
மேலும் எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவர் முக்கிய வீரராக இடம்பெற்று விளையாட இருக்கிறார். இந்நிலையில் தனது இந்த செயல்பாடுகள் குறித்து பேசியுள்ள ஹார்டிக் பாண்டியா கூறுகையில் : இந்திய அணிக்காக விளையாடும்போது நெருக்கடியை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
நான் சர்வதேச போட்டிகளில் விளையாடும் போது ஹார்டிக் பாண்டியாவாக தனி ஒருவனுக்காக விளையாடவில்லை. என்னுடைய நாட்டுக்காக விளையாடுகிறேன். இந்திய அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய குறிக்கோள்.
நாம் எத்தனை பந்துகள் விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல நமது அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதே முக்கியம். பும்ரா போன்று என்னால் மிகச் சிறப்பாக பந்துவீச முடியாது. ஆனால் எனக்கு தெரிந்ததை வைத்து ஒவ்வொரு பந்திலும் விக்கெட் எடுக்க நினைக்கிறேன்.
இதையும் படிங்க : இந்த உருட்டு பல வருஷமா இருக்கு.. ஹிட்மேன் ஃபார்ம், ஓய்வு பற்றிய தவறான கேள்விக்கு ரோஹித் கடுப்பான பதில்
அதுவும் நமது நாடு வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் என்று பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது இன்று பிப்ரவரி 6-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெறவுள்ளது.