இந்த உருட்டு பல வருஷமா இருக்கு.. ஹிட்மேன் ஃபார்ம், ஓய்வு பற்றிய தவறான கேள்விக்கு ரோஹித் கடுப்பான பதில்

Rohit Sharma 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக 4 – 1 (5) என்ற கணக்கில் சூரியகுமார் தலைமையில் டி20 தொடரை வென்றது. அடுத்ததாக ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடுகிறது. அந்தத் தொடரில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி ஃபார்முக்கு வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

ஏனெனில் கடந்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் தொடர்களில் சுமாராக விளையாடிய அவர் இந்தியாவின் தோல்விகளுக்கு காரணமாக அமைந்தார். இது போக அந்தத் தோல்விகளால் ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தான் கேப்டனாக ரோகித் சர்மாவின் கடைசித் தொடராக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 37 வயதை கடந்து விட்ட அவர் கேப்டனாகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

- Advertisement -

தவறான கேள்வி:

இந்நிலையில் ஹிட்மேன் என்றழைக்கப்படும் நீங்கள் இந்த இங்கிலாந்து தொடரில் அசத்துவீர்களா என்று ரோஹித் சர்மாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இது பற்றி செய்தியாளரின் கேள்வி பின்வருமாறு. “ஹாய் ரோஹித். ஹிட்மேன் என்ற பட்டப் பெயரைக் கொண்ட நீங்கள் டெஸ்ட் ஃபார்மெட்டில் அதிக ரன்கள் குவிக்காத போதிலும் இந்தத் தொடரில் அசத்த முடியும் என்ற தன்னம்பிக்கையை கொண்டிருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

மேலும் சாம்பியன்ஸ் ட்ராபியுடன் ஓய்வு பெறப் போகிறீர்கள் என்ற செய்திகள் பற்றி உங்கள் கருத்து என்ன என்றும் கேட்கப்பட்டது. அது போல வரும் உண்மையற்ற உருட்டான செய்திகளை பல வருடங்களாக பார்த்து வருவதாக ரோஹித் காரமான பதில் கொடுத்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்ன மாதிரியான கேள்வி இது. டெஸ்ட் கிரிக்கெட்டை விட ஒருநாள் போட்டிகள். வித்தியாசமான ஃபார்மட் வித்தியாசமான நேரம்”

- Advertisement -

ரோஹித் பதிலடி:

“எப்போதும் மேடு பள்ளங்கள் இருக்கும் என்பது வீரர்களான எங்களுக்குத் தெரியும். அதை எனது கேரியரில் நிறைய எதிர்கொண்டுள்ள எனக்கு இது புதிதல்ல. ஒவ்வொரு தொடரும் ஒவ்வொரு நாளும் புதிது என்பதால் கடந்தக் காலத்தை பார்க்காமல் வருங்கால சவால்களை நான் எதிர்நோக்கியுளேன். 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபி வரவிருக்கும் நிலையில் என்னுடைய ஓய்வு பற்றி இங்கு பேசுவதில் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?”

இதையும் படிங்க: க்ளாஸெனை அவுட்டாக்கும் முன் ரோஹித்திடம் இதை சொன்னேன்.. 2024 டி20 உ.கோ வென்றது பற்றி பாண்டியா

“இது போன்ற செய்திகள் பல வருடங்களாக சென்று கொண்டிருக்கின்றன. அதற்கான விளக்கத்தைக் கொடுப்பதற்காக இங்கே நான் இல்லை. தற்போதைய போட்டிகளில் நான் கவனம் செலுத்துகிறேன். அதன் பின் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து முதல் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி துவங்குகிறது.

Advertisement