7 மாசத்துக்கு முன்னாடி யாரும் நம்பியிருக்க மாட்டாங்க. இந்திய கேப்டனாக மாறியது பற்றி பேசிய – ஹார்டிக் பாண்டியா

Hardik-Pandya
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் ஆல் ரவுண்டான ஹர்திக் பாண்டியா நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 15 வது சீசனில் சிறப்பான கம்பேக் கொடுத்து அனைவரையும் வியக்க வைத்தார். குஜராத் அணியின் கேப்டனாக பதவியேற்ற முதல் சீசனிலேயே கோப்பையை பெற்றுக் கொடுத்தது மட்டுமின்றி பேட்டிங்கில் 15 போட்டிகளில் 487 ரன்களையும், பந்துவீச்சிலும் சில விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியிருந்தார். அதோடு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியிலும் ஆட்டநாயகன் விருதினையும் பெற்று அசத்தியிருந்தார். இப்படி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தவே நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் அவர் இடம் பிடித்திருந்தார்.

Hardik Pandya 1

- Advertisement -

அப்படி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஹார்டிக் பாண்டியா தற்போது அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே இன்று துவங்கும் இந்த தொடரானது 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக தான் முதல்முறையாக கேப்டனாக செயல்பட இருப்பது குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணிக்காக தலைமை தாங்குவது என்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். ஏழு மாதங்களுக்கு முன்பு எனக்கு கேப்டன் பதவி கிடைக்கும் என்று கூறியிருந்தால் யாரும் நம்பி இருக்க மாட்டார்கள். ஆனால் வாழ்க்கை என்பது எப்போதுமே மாறிவரும் ஒன்று. அந்த வகையில் தற்போது என்னுடைய வாழ்க்கையிலும் சரியான மாற்றம் வந்துள்ளதாக நினைக்கிறேன்.

Hardik Pandya 2

ஐபிஎல் தொடரில் நான் கேப்டனாக விளையாடிய போது நிச்சயம் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்கும் போது என்னுடைய பெஸ்ட்டுடன் வரவேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் கடந்த ஆறு ஏழு மாதங்களாக நான் அளித்த கடின உழைப்பு தற்போது இந்திய அணியில் மீண்டும் திரும்பியது மட்டுமின்றி கேப்டனாகவும் மாற வைத்துள்ளது. இந்திய அணிக்காக கேப்டனாக செயல்பட இருப்பது மகிழ்ச்சி.

- Advertisement -

அந்த வகையில் எனக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த நினைக்கிறேன். இந்த தொடரில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வதில் மட்டுமே தற்போது உன்னிப்பாக இருக்கிறேன். முன்பை விட தற்போது கேப்டனாக விளையாட இருப்பது அதிக பொறுப்பு. நான் கேப்டன் பொறுப்பை ஏற்றால் சிறப்பாக செயல்பட்டேன் என்று எப்போதும் நம்பினேன். எனவே இம்முறை இந்திய அணியின் கேப்டனாகவும் சிறப்பாக செயல்படுவேன் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க : ரோஹித்துக்கு கொரோனா உறுதி. இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக வாய்ப்புள்ள 2 வீரர்கள் – விவரம் இதோ

தோனி, கோலி, ரோஹித் ஆகியோரிடம் இருந்து இந்திய அணியை வழிநடத்தும் விடயங்களை நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அந்த வகையில் அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டதை பயன்படுத்தி இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றிகளைப் பெற்று தருவேன். அது மட்டுமே கேப்டனாக என்னுடைய இலக்கு என்று ஹர்திக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement