ரோஹித்துக்கு கொரோனா உறுதி. இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக வாய்ப்புள்ள 2 வீரர்கள் – விவரம் இதோ

ind
- Advertisement -

கடந்த ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது முதல் நான்கு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது 2 க்கு 1 என்ற கணக்கில் அந்த தொடரில் முன்னிலை வகித்த வேளையில் ஐந்தாவதாக நடைபெற இருந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் ஏற்பட்ட கொரோன அச்சம் காரணமாக அந்த போட்டியானது அப்போது ஒத்திவைக்கப்பட்டது.

Rohith

- Advertisement -

அப்படி தள்ளி வைக்கப்பட்ட அந்த இறுதி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை பர்மிங்காமில் நடைபெறும் என்று ஏற்கனவே அட்டவணை வெளியாகி இருந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே இங்கிலாந்து சென்றடைந்து தற்போது கவுண்டி அணியுடன் இணைந்து பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ சார்பில் அதிகாரவபூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக தற்போது வீரர்கள் தங்கி இருக்கும் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ரோஹித் சர்மா பி.சி.சி.ஐ மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளார். சிகிச்சைக்கு பிறகே அவர் அணியில் இணைய முடியும் என்பதால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.

IND

மேலும் கொரோனா சிகிச்சையில் இருக்கும் ரோஹித் சர்மா நிச்சயம் ஐந்து நாட்கள் வரை தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதனால் கட்டாயம் அவர் இந்த 5 ஆவது டெஸ்ட் போட்டியை தவற விடுகிறார். எனவே இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் தற்போது இந்திய அணி உள்ளது. அந்த வகையில் புதிய இந்திய டெஸ்ட் கேப்டனாக பதவியேற்க இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

ஒன்று தற்போதைய இந்திய அணியின் துணை கேப்டனாக இருக்கும் ஜஸ்ப்ரீத் பும்ரா ரோகித்துக்கு பதிலாக முதல்முறையாக டெஸ்ட் கேப்டனாக அறிமுகமாகலாம் அல்லது டெஸ்ட் அணியில் தற்போது முதன்மை வீரராக விளையாடும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கேப்டனாக விளையாடலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : எவ்ளோ எச்சரித்தும் கேக்காமல் தற்போது அணியை பிரச்சனையில் தள்ளிய ரோஹித் சர்மா – இதெல்லாம் தேவையா?

ஆனாலும் அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக பணியாற்றிய ரிஷப் பண்டின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாததால் பும்ராவிற்கே கேப்டன் பதவி செல்ல அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement