பெஞ்சில் இருந்த வீரர்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை. இறுதிப்போட்டிக்கு பிறகு – பாண்டியா கூறியது என்ன?

Hardik-Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று நேப்பியரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட வேளையில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது கிரிக்கெட் போட்டியானது இன்று நேப்பியர் நகரில் துவங்கி நடைபெற்றது.

Shreyas Iyer

- Advertisement -

இந்த போட்டியின் போது டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்கள் குவித்தது. பின்னர் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலேயே அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் கேப்டன் ஹார்டிக் பாண்டியாவின் அதிரடி காரணமாக 9 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் குவித்திருந்தபோது போட்டியில் மழை குறுக்கிட்டது.

அதன் பிறகு நீண்ட நேரம் மழை பெய்து கொண்டே இருந்ததால் இந்த போட்டி டக் வொர்த் லூயிஸ் முறைக்கு சென்றது. இந்த விதியின் அடிப்படையில் இரு அணிகளும் அந்த நேரத்தில் சரியான அளவில் ரன்களை எடுத்து இருந்ததன் காரணமாக போட்டி டிராவில் முடிந்தது. இதன் காரணமாக இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வாய்ப்புக்காக காத்திருந்த பல வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sanju Samson

அதிலும் குறிப்பாக சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக், சுப்மன் கில் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கேள்விகளை எழுப்பியது. இந்நிலையில் அவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த இறுதிப் போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் : அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தான் நாங்களும் நினைக்கிறோம்.

- Advertisement -

ஆனால் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலாவது போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டு போட்டிகள் மட்டுமே இருந்ததால் எங்களால் அனைவருக்கும் வாய்ப்பினை வழங்க முடியவில்லை. அதோடு மைதானத்தின் தன்மை மற்றும் வானிலை நிலவரம் என அனைத்துமே நாம் ஆலோசித்து பார்க்க வேண்டியது அவசியம். அந்த வகையில் தான் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க முடியவில்லை.

இதையும் படிங்க : இவர்கிட்ட அப்படி என்னதான் இருக்கு? புதிய தேடலில் ரோஹித் – ராகுலை மிஞ்சும் தடவல் ஜோடி கிடைத்ததால் ரசிகர்கள் ஏமாற்றம்

இருந்தாலும் இன்னும் அடுத்த டி20 உலக கோப்பைக்கு இரண்டு ஆண்டுகள் இருப்பதால் நிச்சயம் அணியில் உள்ள அனைவரும் இனிவரும் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும் என்று இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement