இவர்கிட்ட அப்படி என்னதான் இருக்கு? புதிய தேடலில் ரோஹித் – ராகுலை மிஞ்சும் தடவல் ஜோடி கிடைத்ததால் ரசிகர்கள் ஏமாற்றம்

Ishan Kishan and Pant
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வெல்லத் தவறிய இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அதில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டியில் சூரியகுமார் யாதவின் அதிரடியான சதத்தால் 65 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா நவம்பர் 22ஆம் தேதியன்று நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டியில் களமிறங்கியது. நேப்பியர் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து டேவோன் கான்வே 59 (49) ரன்களும் கிளன் பிலிப்ஸ் 54 (33) ரன்களும் எடுத்ததால் ஒரு கட்டத்தில் 130/2 என்ற வலுவான நிலையில் இருந்தது.

ஆனால் கடைசி நேரத்தில் மடமடவென வெக்கெட்டுகளை சாய்த்த இந்தியா நியூசிலாந்தை 19.4 ஓவரில் சுருட்டி 160 ரன்களுக்கு சுருட்டி அசத்தியது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் மற்றும் அர்ஷிதீப் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதை தொடர்ந்து 161 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரிஷப் பண்ட் 11, இஷான் கிசான் 10, ஷ்ரேயஸ் ஐயர் 0, சூரியகுமார் யாதவ் 10 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் கேப்டன் பாண்டியா முக்கிய நேரத்தில் அதிரடியாக 30* (18) ரன்கள் எடுத்தார். அதனால் 9 ஓவரில் 75/4 என்ற நிலையில் இந்தியா இருந்த போது வந்த மழை போட்டியை நிறுத்தியது.

- Advertisement -

புதிய தடவல் ஜோடி:
ஆச்சரியப்படும் வகையில் டிஎல்எஸ் விதிமுறைப்படி அப்போது இந்தியா தேவையான ரன்களை சரியாக எடுத்திருந்ததால் இப்போட்டி சமனில் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். அதனால் 1 – 0 (3) என்ற கணக்கில் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் சாய்த்து கோப்பையை வென்ற இந்தியா விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இளம் வீரர்களுடன் சாதித்து காட்டியது. முன்னதாக உலக கோப்பையில் தோல்வியை சந்திக்க ரோகித் சர்மா – கேஎல் ராகுல் ஆகிய ஓப்பனிங் ஜோடி தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது.

அதனால் 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக புதிய அணியை உருவாக்கும் முயற்சியை துவங்கியுள்ள இந்தியா இத்தொடரில் ரிஷப் பண்ட் – இஷான் கிசான் ஆகியோருக்கு வாய்ப்பளித்தது. அதில் இப்போட்டியில் வெறும் 13 ரன்களை ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி 2வது போட்டியில் 36 ரன்களை மட்டுமே எடுத்தது. குறிப்பாக 2வது போட்டியில் 31 பந்துகளில் 36 ரன்கள் எடுத்த இஷான் கிசான் இப்போட்டியில் 11 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். மறுபுறம் 2வது போட்டியில் 13 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த ரிஷப் பண்ட் இப்போட்டியில் 5 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

மொத்தத்தில் பவர் பிளே ஓவர்களில் அதிரடி சரவெடியாக செயல்பட்டு மிரட்டலான தொடக்கத்தை கொடுக்க வேண்டிய இந்த ஜோடி ராகுல் – ரோஹித் ஆகியோர் உலகக் கோப்பையில் வெளிப்படுத்திய தடவலை மிஞ்சும் வகையில் மெகா தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. ஏனெனில் 2 போட்டிகளிலுமே இந்த ஜோடி தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பேட்டிங் செய்யவில்லை என்பதை ரசிகர்கள் கண்கூடாக பார்த்தார்கள். அதனால் அடுத்த தொடரில் சுப்மன் கில் – பிரிதிவி ஷா போன்ற வாய்ப்புக்காக காத்திருக்கும் இவரை இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

இதில் இஷான் கிசான் கூட இதற்கு முன் சில போட்டிகளில் அதிரடியாக செயல்பட்டுள்ளார். ஆனால் அறிமுகமானது முதல் இப்போது வரை 65 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்பை பெற்றும் டி20 கிரிக்கெட்டில் ஒருமுறை கூட ரசிகர்கள் மனதில் நிற்கும் அளவுக்கு ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்பட்டதில்லை. ஆனாலும் அவருக்கு மிடில் ஆர்டர் முதல் ஓப்பனிங் வரை வாய்ப்பளிக்கும் இந்திய அணி நிர்வாகம் உள்ளங்கையில் வைத்து தாங்கி வருகிறது. மறுபுறம் சமீபத்திய போட்டிகளில் அவரை விட அதிரடியாக அதிக ரன்களை குவித்த சஞ்சு சாம்சனுக்கு புதிய கேப்டன் பாண்டியா வந்தும் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வேதனையை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement