தோல்விக்கு பின்னரும் மற்ற அணிகளை கம்பேர் செய்து ஓய்வறையில் வீர வசனம் பேசிய – ஹார்டிக் பாண்டியா

Hardik
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹார்டிக் பாண்டியா அறிவிக்கப்பட்டதிலிருந்தே மும்பை இந்தியன்ஸ் அணியை சுற்றி பல காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக சாம்பியன் கேப்டனான ரோகித் சர்மாவை பதவி நீக்கம் செய்துவிட்டு பாண்டியாவை புதிய கேப்டனாக மாற்றியது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பாண்டியா செல்லும் இடம் எங்கும் ரசிகர்கள் வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர். மேலும் களத்தில் ஹார்டிக் பாண்டியாவின் ஆட்டிட்யூட் காரணமாக நாளுக்கு நாள் அவரின் மீதான எதிர்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

- Advertisement -

ஏற்கனவே குஜராத் அணிக்கு எதிரான போட்டியின் போது அகமதாபாத் மைதானத்தில் ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்திருந்த வேளையில் நேற்று ஹைதராபாத் மைதானத்திலும் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக குரலெழுப்பிய ரசிகர்கள் பாண்டியாவை கிண்டல் செய்திருந்தனர்.

இந்நிலையில் களத்தில் ஆட்டிட்யூட் காண்பிக்கும் ஹர்திக் பாண்டியா நேற்று போட்டி முடிந்து தோல்விக்கு பின்னர் வீரர்களின் ஓய்வறையிலும் கெத்து காட்டி பேசியுள்ளபடி ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மும்பை அணி 277 ரன்களை விட்டுக் கொடுத்திருந்த வேளையில் 31 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்து இருந்தது.

- Advertisement -

ஆனால் இந்த போட்டி முடிந்து வீரர்களின் ஓய்வறையில் கேப்டனாக பேசிய பாண்டியா கூறுகையில் : கடினமான வீரர்களுக்கு தான் கடினமான சோதனை வைக்கப்படும். அந்த வகையில் ஐபிஎல் தொடரிலேயே கடினமான அணி என்றால் அது மும்பை அணிதான். இவ்வளவு பெரிய இலக்கை எதிர்த்து நம்மை போல் வேறு எந்த அணியாலுல் வந்திருக்க முடியாது. ஒரு பேட்டிங் குழுவாக நாம் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம்.

இதையும் படிங்க : ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியின் மூலம் மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – ரிஷப் பண்ட்

அதேபோன்று இவ்வளவு ரன்கள் சென்றும் நமது பவுலர்கள் பயப்படவில்லை. அடுத்தடுத்த ஓவரை கொடுங்கள் என்று ஆர்வமாக கேட்டுக்கொண்டே இருந்தனர். எந்த நிலை வந்தாலும் ஒன்றாக எதிர்கொள்வோம் என்றும் மும்பை அணி தான் பெரிய அணி போன்று தற்போது ஹர்திக் பாண்டியா ஓய்வறையில் வீர வசனம் பேசியுள்ளது மேலும் விவாதங்களை எழுப்பியுள்ளது.

Advertisement