ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியின் மூலம் மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – ரிஷப் பண்ட்

Pant
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த 2016-ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமானார். அப்படி ஐ.பி.எல் தொடரில் அறிமுகமான அடுத்த ஆண்டு இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டிலும், 2018-ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இடம் பிடித்து நட்சத்திர வீரராகவும் உருவெடுத்தார்.

அதிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது ஆட்டம் படுஜோராக இருந்ததால் தவிர்க்க முடியாத வீரராகவும் மாறினார். ஆனால் கடந்த 2022-ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கிய அவர் கடந்த ஓராண்டாகவே எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார்.

- Advertisement -

இவ்வேளையில் ஓராண்டுக்கு பிறகு தற்போது அவர் மீண்டும் 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் மூலம் கிரிக்கெட் களத்திற்கு திரும்பி உள்ளார். தற்போது 26 வயதாகும் ரிஷப் பண்ட் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் வேளையில் இன்று ஜெய்ப்பூர் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க இருப்பதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றிணையும் நிகழ்த்த காத்திருக்கிறார்.

அந்த வகையில் இதுவரை டெல்லி அணிக்காக 99 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் டெல்லி அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய அமித் மிஸ்ராவின் சாதனையை சமன் செய்துள்ளார். அமித் மிஸ்ரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் டெல்லி அணிக்காக 99 போட்டிகளில் விளையாடி சமநிலையில் உள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் பண்ட் பங்கேற்பதன் மூலம் டெல்லி அணிக்காக மட்டும் 100 ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்த உள்ளார்.

இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியா எடுத்த அந்த முடிவு எனக்கு புரியவே இல்ல.. பாண்டியா தப்பு பண்ணிட்டாரு – ஸ்டீவ் ஸ்மித் கருத்து

அதோடு டெல்லி அணிக்காக இதுவரை அவர் 2856 ரன்களை குவித்துள்ள வேளையில் இன்னும் 400 ரன்களுக்கு மேல் அடிக்கும் பட்சத்தில் டெல்லி அணிக்காக அதிக ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையில் முதலிடத்தில் இருக்கும் டேவிட் வார்னையும் அவர் மிஞ்சுவார். மேலும் இதுவரை டெல்லி அணிக்காக ஒரு சதம் மற்றும் 15 அரைசதங்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement