ஹார்டிக் பாண்டியா எடுத்த அந்த முடிவு எனக்கு புரியவே இல்ல.. பாண்டியா தப்பு பண்ணிட்டாரு – ஸ்டீவ் ஸ்மித் கருத்து

Pandya
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எட்டாவது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹைதராபாத் அணியானது 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 277 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது.

அதன் பின்னர் அந்த பிரமாண்ட இலக்கை துரத்தி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி வரை போராடியும் 246 ரன்களை மட்டுமே குவித்ததால் 31 வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதோடு இந்த தொடரில் தொடர்ச்சியாக தங்களது இரண்டாவது தோல்வியையும் பதிவு செய்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவின் முடிவுகள் தனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். தற்போது ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் ஸ்டீவ் ஸ்மித் பாண்டியாவின் கேப்டன்சி முடிவுகள் குறித்து பேசுகையில் கூறியதாவது :

மும்பை இந்தியன்ஸ் அணி அவர்களுடைய பந்துவீச்சு திட்டத்தை மாற்றியது குறித்து நான் குழப்பம் அடைந்துள்ளேன். ஏனெனில் இந்த போட்டியில் பும்ரா நான்காவது ஓவரை தான் வீசினார். அதிலும் குறிப்பாக அந்த ஓவரில் அவர் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த வேளையில் மீண்டும் அவரை இரண்டாவது ஓவருக்கு கொண்டு வந்தது 13-ஆவது ஓவரில்தான்.

- Advertisement -

அதுவரை பும்ராவை ஏன் பந்துவீச அழைக்கவில்லை என்று எனக்கு புரியவில்லை அதற்குள் ஹைதராபாத் அணி 173 ரன்கள் விளாசிவிட்டது. அதேபோன்று இந்த போட்டியில் பும்ராவிற்கு ஏன் முதல் ஓவரை வழங்கவில்லை என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது. மும்பை அணியின் நட்சத்திர வீரரான பும்ரா துவக்கதிலேயே தொடர்ந்து இரண்டு ஓவர்களை வீசி இருந்தால் நிச்சயம் அது அந்த அணிக்கு சாதகத்தை கொடுத்திருக்கும்.

இதையும் படிங்க : தலையை நிமிர்த்து சாம்பியன்.. கம்பேக் அதுல தான் இருக்கு.. 17 வயது வீரருக்கு பொல்லார்ட், ப்ராவோ மெசேஜ்

ஆனால் பாண்டியா இப்படி பந்துவீச்சாளர்களை மாற்றி பயன்படுத்தியது ஹைதராபாத் அணியின் ரன் குவிப்பிற்கு உதவியதாகவே எனக்கு தெரிகிறது. பாண்டியாவின் இப்படி ஒரு முடிவு தவறான ஒன்று பும்ராவை முன்கூட்டியே பந்துவீச அழைத்திருந்தால் நிச்சயம் இவ்வளவு ரன்கள் வரை சென்றிருக்காது என ஸ்டீவ் ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement