தலையை நிமிர்த்து சாம்பியன்.. கம்பேக் அதுல தான் இருக்கு.. 17 வயது வீரருக்கு பொல்லார்ட், ப்ராவோ மெசேஜ்

Kwena Maphaka 2
- Advertisement -

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் மார்ச் 27ஆம் தேதி நடைபெற்ற 8வது லீக் போட்டியில் மும்பையை அடித்து நொறுக்கிய ஹைதராபாத் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் டிராவிஸ் ஹெட் 62, அபிஷேக் சர்மா 63, க்ளாஸென் 80* ரன்கள் எடுத்த உதவியுடன் 277/3 ரன்கள் குவித்த ஹைதராபாத் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக சாதனை படைத்தது.

அதன் பின் 278 ரன்களை துரத்திய மும்பை முடிந்தளவுக்கு போராடியும் 246/5 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக டிம் டேவிட் 42*, திலக் வர்மா 64 ரன்கள் எடுத்த நிலையில் ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் கம்மின்ஸ், ஜெயதேவ் உனட்கட் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். முன்னதாக இந்த போட்டியில் 17 வயதாகும் இளம் தென்னாப்பிரிக்க வீரர் க்வேனா மபாகா மும்பைக்காக அறிமுகமானார்.

- Advertisement -

ப்ராவோ ஆதரவு:
கடந்த 2024 அண்டர்-19 ஐசிசி உலகக் கோப்பையில் அதிக விக்கெட் எடுத்து தொடர்நாயகன் விருது வென்று சாதனை படைத்த அவர் பும்ராவை முந்தி விராட் கோலியின் விக்கெட்டுகளை எடுப்பேன் என்று தன்னம்பிக்கையுடன் பேசியது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த நிலையில் அறிமுகமான அவரை இந்த போட்டியில் ஹைதெராபாத் பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கினார்கள்.

அதனால் 4 ஓவரில் 1 விக்கெட் கூட எடுக்காமல் 66 ரன்கள் கொடுத்த அவர் ஐபிஎல் வரலாற்றில் அறிமுகப் போட்டியிலேயே அதிக ரன்கள் கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்தார். இந்நிலையில் இது போன்ற மோசமான நாட்கள் தான் வலுவாக கம்பேக் கொடுப்பதற்கு உதவும் என்று அவருக்கு ட்வயன் ப்ராவோ உத்வேகமான மெசேஜ் கொடுத்துள்ளார். இது பற்றி இன்ஸ்டாகிராமில் பிராவோ கூறியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“உன்னுடைய தலையை நிமிர்ந்து வைத்துக்கொள் சாம்பியன். மபாகா கண்டிப்பாக நீ மீண்டு வருவாய் என்று உறுதியாக சொல்வேன். இந்த ஒரு போட்டியை வைத்து உன் மீது சந்தேகப்பட துவங்கி விடாதே. இது உனக்கு மிகப்பெரிய சவால். இந்தத் தொடர் செல்லும் போது தான் இன்னும் நீ முன்னேற்றமடைவாய்” என்று கூறியுள்ளார். அதே போல அவருக்கு கைரன் பொல்லார்ட் இன்ஸ்டாகிராமில் கொடுத்துள்ள ஆதரவு பின்வருமாறு.

இதையும் படிங்க: ருதுராஜ் அந்த விஷயத்துல என்ன மாதிரியே இருக்காரு.. ரச்சின் ரவீந்திரா பற்றிய கேள்விக்கு தோனி ஓப்பன்டாக்

“தலையை உயர்த்து இளைஞனே. இன்னும் பெரிய விஷயங்கள் அடைய வேண்டும். உங்கள் குடும்பத்தினர் அன்புக்குரியவர்கள் உங்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். கேரியரில் முதல் நாள் கடினமாக இருந்தது. ஆனால் நீங்கள் தொடர்ந்து வருவது பிடித்திருக்கிறது. உங்கள் கடையில் பெரிய பொருட்கள் இருக்கிறது. எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. 17 வயது இளமையில் உங்களுக்கு மும்பை இந்தியன்ஸ் ஒரு தளத்தை தருவதாக நம்புகிறோம்” என்று கூறினார்.

Advertisement