ருதுராஜ் அந்த விஷயத்துல என்ன மாதிரியே இருக்காரு.. ரச்சின் ரவீந்திரா பற்றிய கேள்விக்கு தோனி ஓப்பன்டாக்

MS Dhoni CSK
- Advertisement -

ஐபிஎல் 2024 தொடரில் நடப்புச் சாம்பியனாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய முதல் 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள சென்னை கோப்பையை தக்க வைக்கும் பயணத்தை வெற்றிகரமாக துவங்கியுள்ளது. குறிப்பாக இந்த வருடம் ஜாம்பவான் எம்எஸ் தோனி சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்து சாதாரண விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார்.

5 கோப்பைகளை வென்று சென்னை வெற்றிகரமான அணியாக ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக திகழும் அவர் 42 வயதை தாண்டி விட்டதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளை பெற்றுள்ள ருதுராஜ் தனது கேப்டன்ஷிப் கேரியரை வெற்றிகரமாக துவக்கியுள்ளார்.

- Advertisement -

புதிய கேப்டன்:
முன்னதாக குஜராத்துக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் சென்னை 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்தப் போட்டியில் பதிரனா வீசிய 15வது ஓவரில் சாய் சுதர்சன் கொடுத்த கேட்ச்சை ரச்சின் ரவீந்திரா பிடிக்க முயற்சித்தும் கடைசியில் தவற விட்டார். ஆனால் அதன் பின் சிறப்பாக செயல்பட்ட ரச்சின் ரவீந்திரா 3 கேட்ச்களை பிடித்து அசத்தினார்.

இந்நிலையில் சமீபத்திய தனியார் நிகழ்ச்சியில் ரச்சின், தோனி, சிவம் துபே, ருதுராஜ் ஆகிய நால்வரும் கலந்து கொண்டனர். அதில் சாய் சுதர்சன் கேட்ச் விட்டதும் தோனி கோபத்தால் முறைக்கிறாரா? என்று பார்த்தீர்களா என ரச்சின் ரவீந்திராவிடம் தொகுப்பாளர் கேட்டார். அப்போது முந்திக்கொண்ட தோனி “கேப்டன் நான் இல்லை ருதுராஜ்” என்று பதிலளித்தது அரங்கத்தில் இருந்தவர்களை சிரிக்க வைத்தது.

- Advertisement -

மேலும் ருதுராஜ் ஏறக்குறைய தம்மை போல இளம் வீரர்களிடம் கோபமான ரியாக்சன் கொடுப்பதில்லை என்றும் தோனி பாராட்டியுள்ளார். இது பற்றி தோனி பேசியது பின்வருமாறு. “அங்கே புதிய கேப்டன் இருக்கிறார். கேட்ச் விட்டதற்கான அதிருப்தி எனக்குள் இருந்தது. ஆனால் பொதுவாக நான் அதிகம் ரியாக்சன் கொடுக்கும் நபர் கிடையாது. குறிப்பாக முதல் அல்லது 2வது போட்டியில் விளையாடுபவரிடம் நான் எந்த ரியாக்சனும் கொடுக்க மாட்டேன்”

இதையும் படிங்க: மும்பையை ரிவர்ஸ் கியரில் 2008க்கு அழைத்து சென்ற பாண்டியா.. 16 வருடங்கள் கழித்து பரிதாப சாதனை

“ருதுராஜூம் அப்படியே என்று நினைக்கிறேன். அதே சமயம் ரச்சின் ரவீந்திரா களத்தில் அனைத்து பக்கங்களும் ஓடுவதை பார்ப்பது வேடிக்கையாக இருந்தது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து வரும் மார்ச் 31ஆம் தேதி சிஎஸ்கே தங்களுடைய 3வது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் கிரிக்கெட் அணியை விசாகப்பட்டினம் நகரில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement