ஹார்டிக் பாண்டியாவால் ஏற்பட்டுள்ள சிக்கல். செலக்டர்ஸ் மற்றும் டீம் மேனேஜ்மென்ட் அதிருப்தி – விவரம் இதோ

- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடன் உலகக் கோப்பை டி20 தொடர் போட்டிகளானது அங்கு நடைபெற உள்ளன. ஏற்கனவே இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்ட வேளையில் இம்மாதத் துவக்கத்தில் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் இந்திய அணியில் சில தொடர்களாக பந்து வீசாமல் இருந்து வரும் ஆல்ரவுண்டர் ஹார்டிக் பண்டியாவின் பெயரும் இடம்பெற்றது.

Pandya-4

- Advertisement -

அவர் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் அசத்துவார் என்பதினாலேயே அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான தொடரின் போது ஒரு சில ஓவர்கள் மட்டுமே பந்து வீசிய பாண்டியா இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் பந்து வீசாமல் இருந்து வருகிறார். இதனால் தற்போது தேர்வுக்குழு உறுப்பினர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.

ஏனெனில் பாண்டியா ஒரு ஆல்-ரவுண்டராக விளையாடினால் மட்டுமே இந்திய அணிக்கு தேர்வாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த ஐபிஎல் தொடரில் அவர் நிச்சயம் பந்து வீசுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த ஐபிஎல் தொடரிலும் அவர் பந்து வீசாதது தேர்வாளர்கள் மற்றும் டீம் மேனேஜ்மென்ட் ஆகியோரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி மும்பை அணியின் பயிற்சியாளரான ஜெயவர்த்னேவும் பாண்டியா இன்னும் பந்துவீசும் அளவிற்கு தயாராகவில்லை என்று கூறியுள்ளார்.

pandya 1

மேலும் அவரை ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே நாங்கள் பயன்படுத்தி வருகிறோம் என்று கூறியுள்ளார். மேலும் பாண்டியா பந்துவீசும் பட்சத்தில் அவருக்கு காயம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் நாங்கள் அவரை பந்துவீச வைக்காமல் இருந்து வருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். அவரின் இந்த பேட்டிக்கு பிறகு இந்த தொடர் முழுவதுமே பாண்டியா பந்துவீச மாட்டார் என்று தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : கே.எல் ராகுல் மாதிரி இவரும் பெரிய வீரரா வருவார். சி.எஸ்.கே அணியின் இளம்வீரரை பாராட்டிய – பிரைன் லாரா

இன்னும் ஒரு சில வாரங்களில் உலக கோப்பை தொடர் துவங்க உள்ள நிலையில் பாண்டியா இன்னும் பந்துவீசும் அளவிற்கு தகுதிபெறவில்லை என்பது இந்திய அணிக்கு பெரிய சிக்கலாக மாறியுள்ளது. ஏனெனில் அவர் பந்துவீசாத பட்சத்தில் நிச்சயம் அவர் இந்திய அணியில் விளையாட வாய்ப்பில்லை. அதே வேளையில் இந்திய அணிக்கு மற்றொரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வேண்டும் என்றும் அணி நிர்வாகம் எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement