கே.எல் ராகுல் மாதிரி இவரும் பெரிய வீரரா வருவார். சி.எஸ்.கே அணியின் இளம்வீரரை பாராட்டிய – பிரைன் லாரா

Lara
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் தற்போதைய ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பிட்ட சில வீரர்கள் தங்களது அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தனர். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த இளம் துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 101 ரன்கள் குவித்து தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

gaikwad

- Advertisement -

இந்த போட்டியில் 189 ரன்கள் அடித்த சென்னை அணி தோற்று இருந்தாலும் கெய்க்வாட்டின் இந்த ஆட்டம் பெரிதளவு கவனத்தை ஈர்த்தது. இந்த போட்டியின் முதல் ஓவரில் இருந்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 9 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் என 60 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். அதிலும் குறிப்பாக துவக்கத்தில் அரைசதத்தை 43 பந்துகளில் கடந்த அவர் அதன்பிறகு மிடில் ஓவர்களில் தனது சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவரது ப்ராப்பரான ஷாட்கள் தற்போது பெரிதளவு பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது இந்த ஆட்டத்தை பார்த்து வியந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் லாரா இதுகுறித்து கூறுகையில் : ருதுராஜ் கெய்க்வாட் இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடினார். பெரிய பெரிய ஷாட்களை அவர் விளையாடும் போது அவருடைய ஷேப்பை மாற்றாமல் சிறப்பாக எதிர்கொண்டார்.

gaikwad 2

அவர் அடித்த அனைத்து ஷாட்களும் க்ளீனாக இருந்தன. முதலில் 29 பந்துகளில் 30 ரன்கள் வரை மட்டுமே அடித்த அவர் அதன்பிறகு பந்துவீச்சாளர்களை தாக்க ஆரம்பித்தார். நிச்சயம் அவர் விளையாடிய இந்த இன்னிங்ஸ் அற்புதமான ஒன்று. அவரது இந்த ஆட்டம் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நிச்சயம் இவரால் நல்ல கிரிக்கெட் ஷாட்டுகளை விளையாட முடிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : டெல்லி அணிக்கெதிரான இன்றைய போட்டிக்கான சி.எஸ்.கே அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

அதன் மூலமே அவர் பெரிய ரன்களை குவிக்கிறார். ஒரு பேட்ஸ்மேனாக அவரைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன். நிச்சயம் அவர் கே.எல் ராகுல் போன்று அதே கேட்டகரியில் வருவார் என லாரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி நிர்ணயித்த 190 ரன்கள் இலக்கை எட்டி ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்டநாயகன் விருது கெய்க்வாட்டிற்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement