டெல்லி அணிக்கெதிரான இன்றைய போட்டிக்கான சி.எஸ்.கே அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

cskvsdc
cskvsdc
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் தொடரானது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த வாரத்தோடு லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைய உள்ள நிலையில் தற்போது இன்று நடைபெற இருக்கும் 49 லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. ஏற்கனவே இவ்விரு அணிகளும் புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களை கைப்பற்றி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளதால் எந்த அணி தோற்றாலும் பாதகம் இல்லை.

- Advertisement -

இருப்பினும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கும் என்பதனால் இவ்விரு அணிகள் இன்று தங்களது பலத்தை நிரூபிக்க காத்திருக்கின்றன. மேலும் அனுபவம் வாய்ந்த சிஎஸ்கே அணியை வீழ்த்த ரிஷப் பண்ட் தலைமையிலான இளம் அணி காத்துக்கொண்டிருக்கிறது. ஏனெனில் கடந்த ஆண்டு இறுதிப் போட்டி வரை சென்று தோல்வி அடைந்த டெல்லி அணி இம்முறை கோப்பையை கைப்பற்றிய வேண்டிய உத்வேகத்தில் உள்ளது.

அதே போன்று கடந்த முறை பிளேஆப் வாய்ப்பை தவறவிட்ட சென்னை அணி இம்முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அளவிற்கு சிறப்பாக விளையாடி வருகிறது. இதன் காரணமாக இன்றைய போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் சென்னை சிஎஸ்கே அணியில் யார் ? யார் ? விளையாடுவார்கள் என்ற உத்தேச அணியை நாங்கள் உங்களுக்காக இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

dube

கடைசியாக நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 189 ரன்களை குவித்தும் சென்னை அணி தோற்றால் நிச்சயம் பந்துவீச்சாளர்களின் வரிசையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி கடந்த போட்டியில் விளையாடிய கே.எம் ஆசிப்க்கு பதில் மீண்டும் தீபக் சாஹர் அணியில் இணைவார் என்று தெரிகிறது. மற்றபடி பிராவோ பிட்டாக இருந்தால் அவரும் இடம்பெறுவார் என்றும் கூறப்படுகிறது. இன்றைய போட்டிக்கான சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : டெல்லி அணிக்கெதிரான இன்றைய போட்டியில் சி.எஸ்.கே சீனியர் வீரர் விளையாடுவது சந்தேகம் – விவரம் இதோ

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) டூபிளெஸ்ஸிஸ், 3) மொயின் அலி, 4) சுரேஷ் ரெய்னா, 5) அம்பதி ராயுடு, 6) தோனி 7) ஜடேஜா, 8) ஷர்துல் தாகூர், 9) சாம் கரன் / பிராவோ, 10) கே.எம் ஆசிப் / தீபக் சாகர், 11) ஹேசல்வுட்

Advertisement