டெல்லி அணிக்கெதிரான இன்றைய போட்டியில் சி.எஸ்.கே சீனியர் வீரர் விளையாடுவது சந்தேகம் – விவரம் இதோ

- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் தொடரானது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த வாரம் லீக் சுற்று போட்டிகள் முடிவடைய உள்ள நிலையில் இறுதிக்கட்டத்தில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போகும் கடைசி அணி எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதே வேளையில் 48-லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று நடைபெற உள்ள 49வது லீக் போட்டியில் பிளே ஆப் சுற்றுக்கு தேர்வான, ஏற்கனவே புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

- Advertisement -

இரு அணிகளும் 12 போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் போட்டியில் யார் பெறுகிறார்களோ ? அவர்கள் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் செல்ல வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இரு அணிகளுமே கடுமையாக மோத இருக்கின்றன. மேலும் இந்த போட்டியின் மூலம் எந்த அணியின் பலம் அதிகமாக இருக்கிறது என்பதும் தெரியும் என்பதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் முக்கிய சீனியர் வீரர் ஒருவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற கடந்த போட்டியில் டூபிளெஸ்ஸிஸ் ரன் ஓடும்போது முஸ்தபிசுர் ரகுமான் உடன் மோதியதால் கழுத்துப்பகுதியில் வலியினை உணர்ந்தார். இதன் காரணமாக பேட்டிங்கில் ஆட்டமிழந்து வெளியேறிய அவர் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ்-இன் போது பீல்டிங் செய்ய கூட வரவில்லை. அவருக்கு பதிலாக ராபின் உத்தப்பா அந்த போட்டியில் பீல்டிங் செய்தார்.

faf
Faf CSK

ஏற்கனவே பாகிஸ்தான் ப்ரீமியர் லீக்கின் போது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலமான காயத்தை எதிர்கொண்ட டூபிளெஸ்ஸிஸ் கன்கஷன் காரணமாக சில போட்டிகளை தவறவிட்டார். அதனைத் தொடர்ந்து கரீபியன் லீக் போட்டிகளில் விளையாடும் போதும் அவருக்கு அந்த பாதிப்பு இருந்தது. அதன் காரணமாக கழுத்து பகுதியில் தான் வலியை உணர்வதாகவும் அவர் கூறியிருந்தார்.

- Advertisement -
faf 1
Faf Injury

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை செயல்படுத்தி வந்த டூபிளெஸ்ஸிஸ் எதிர்பாராதவிதமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக காயமடைந்து உள்ளதால் அதே வலியை மீண்டும் சந்தித்துள்ளார். இதன்காரணமாக நிச்சயம் அவருக்கு ஓரிரு போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : என்ன ஆனாலும் சரி. தோனி இவரை மட்டும் சி.எஸ்.கே டீம்ல இருந்து தூக்க மாட்டார் – சேவாக் ஓபன்டாக்

ஏனெனில் தற்போது சிஎஸ்கே அணி 12 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்று ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளதாலும் முதலிடத்தில் இருப்பதாலும் அவரை விளையாட வைத்து ரிஸ்க் எடுப்பதை விட அவருக்கு ஓய்வு கொடுப்பது நல்லது என்ற முடிவினை எடுக்கும் என்பதனால் இன்றைய போட்டியில் நிச்சயம் டூபிளெஸ்ஸிஸ் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

Advertisement