என்ன ஆனாலும் சரி. தோனி இவரை மட்டும் சி.எஸ்.கே டீம்ல இருந்து தூக்க மாட்டார் – சேவாக் ஓபன்டாக்

Sehwag
Advertisement

ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 3 சாம்பியனாக இருந்துள்ள சென்னை சி.எஸ்.கே அணியானது எல்லா ஆண்டும் ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருந்துவருகிறது. ஆனால் யார் கண் பட்டதோ கடந்த ஆண்டு மிகவும் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அதன் பின்னர் தற்போது இந்தாண்டு சென்னை அணியானது இம்முறை பலமாக மீண்டு வந்துள்ளது. கடந்த முறை இருந்த அணியில் இருந்து மொயின் அலி மட்டுமே புதிதாக இணைந்துள்ளார். வேறு எந்த மாற்றமும் இல்லாமல் சி.எஸ்.கே அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

dhoni 2
Dhoni CSK

அதுமட்டுமின்றி இந்த நடப்பு 14-வது ஐ.பி.எல் தொடரின் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கும் தேர்வாகியுள்ளது. கடந்த ஆண்டு அணியில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக சுரேஷ் ரெய்னா விளையாட முடியாமல் போனது சிஎஸ்கே அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது இந்த ஆண்டு மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள சுரேஷ் ரெய்னா பேட்டிங்கில் பெரிய அளவில் சோபிக்க வில்லை என்றாலும் சிஎஸ்கே அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவின் வருகை குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் கூறுகையில் : இந்த ஐபிஎல் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் பாதியில் ரன் அடிக்க முடியாமல் சுரேஷ் ரெய்னா சிரமப்பட்டு வந்தாலும் மற்ற வீரர்கள் அவர் இடத்திற்கு தேர்வாக வாய்ப்பே கிடையாது.

- Advertisement -

Sehwag

ஏனெனில் தோனிக்கு சிஎஸ்கே அணியின் பேட்டிங் லைன் அப் பற்றி நன்றாக தெரியும். எப்படியும் சுரேஷ் ரெய்னா நிச்சயம் பிளே ஆப் போன்ற முக்கியமான போட்டிகளில் கை கொடுப்பார் என்ற நம்பிக்கை அவரிடம் அதிகமாக உள்ளது. அது மட்டுமின்றி கடந்த பல ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்காக முக்கிய போட்டிகளில் பெரிய மேட்ச் மன்னராக சுரேஷ் ரெய்னா இருந்திருக்கிறார்.

raina 1

- Advertisement -

இதன் காரணமாக நிச்சயம் இனிவரும் போட்டிகளிலும் ரெய்னாவை சிஎஸ்கே அணியிலிருந்து தோனி நீக்கமாட்டார். பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும்போது நிறைய அனுபவம் உள்ள சுரேஷ் ரெய்னா நிச்சயம் சிஎஸ்கே அணிக்கு கை கொடுப்பார் என்று சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மக்களுக்கு இப்போ புரியும். நாங்க ஏன் இவரை சி.எஸ்.கே அணியில் வச்சிருக்கோம்னு – இளம்வீரரை பாராட்டிய பிளமிங்

கடந்த பல ஆண்டுகளாகவே சிஎஸ்கே அணியில் மூன்றாம் இடத்தில் இறங்கி விளையாடி வந்த சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு அடிக்கடி இடம் மாற்றப்பட்டு இறக்கப்படுவதால் ரன் குவிக்க தடுமாறுகிறார் என்றும் அவரது ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement