மக்களுக்கு இப்போ புரியும். நாங்க ஏன் இவரை சி.எஸ்.கே அணியில் வச்சிருக்கோம்னு – இளம்வீரரை பாராட்டிய பிளமிங்

Fleming
- Advertisement -

சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 189 ரன்களை குவித்து இருந்தாலும் அடுத்ததாக விளையாடிய ராஜஸ்தான் அணி 190 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. என்னதான் சென்னை அணி இந்த போட்டியில் தோல்வி அடைந்திருந்தாலும் இந்த போட்டியில் துவக்க வீரராக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட்டின் ஆட்டம் ரசிகர்களை பெரிதளவு கவர்ந்தது.

dube

- Advertisement -

இந்த போட்டியில் 60 பந்துகளை சந்தித்த அவர் 101 ரன்களை குவித்து ஐ.பி.ல் போட்டிகளில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்து ரசிகர்களின் மனதை ஈர்த்தார். ஏற்கனவே கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக அறிமுகமான இவர் பல சிறப்பான இன்னிங்சை விளையாடி இருந்தாலும் இந்த முதலாவது சதம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம்.

ஏனெனில் அந்த அளவுக்கு அவர் தனது முறையான கிரிக்கெட் ஷாட்டுகளை மட்டும் விளையாடி எந்தவித ரிஸ்க்கும் எடுக்காமல் இந்த சதத்தை அவர் கடந்தது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

gaikwad

இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டின் இந்த சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில் : கெய்க்வாட்டின் இந்த ஆட்டம் சிறப்பான ஒன்று. அவரிடம் இருந்து இப்படி ஒரு ஹை கிளாஸ் இன்னிங்ஸ் வரும் என்று எங்களுக்கு தெரியும். அதனால் தான் அவரை தொடர்ந்து அணியில் வைத்து வருகிறோம். இந்த போட்டியில் சென்னை அணி தோற்று இருந்தாலும் அவரின் ஆட்டம் பாராட்ட வேண்டிய ஒன்று.

Gaikwad-1

நிச்சயம் இந்த இளம் வீரர் தனது வெற்றிகரமான கரியரை துவங்கி விட்டார் என்றே கூறலாம். இனி வரும் போட்டிகளில் நாம் நினைத்ததைவிட மிகவும் சிறப்பான ஆட்டம் இவரிடம் இருந்து வெளிவரும். நாங்கள் இவரை உயர்வாக நினைத்து அணியில் வைத்திருப்பதற்கு காரணமும் அதுதான். அவர் தற்போது அவரது பாணியில் சிறப்பாக விளையாடி வருகிறார். இனியும் அது தொடரும் என பிளமிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement